💫cckkalviseithikal💫 📮அஞ்சல் வாக்கு (Postal Vote) செலுத்துவதற்கான வழிமுறைகள்

💫cckkalviseithikal💫
📮அஞ்சல் வாக்கு (Postal Vote) செலுத்துவதற்கான வழிமுறைகள்.

📮 கடந்த பயிற்சி வகுப்பில்  அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.

🌀சட்டமன்றத் தொகுதி உள்ள மாவட்டத்தில் பணியாற்றுவோருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி வகுப்பில் அஞ்சல் வாக்குச் சீட்டு கிடைத்திருக்கும். கிடைக்கப் பெறாதவர்களுக்கும், வெளிமாவட்டத்தினருக்கும் வரும் வாரத்தில் அஞ்சல் வழியே வந்து சேர்ந்துவிடும்.

CCK Postal Vote 


⭐அஞ்சல் வாக்களிக்கத் தரப்படும் காக்கி உறையில் என்னென்ன இருக்கும்? எப்படி நிரப்புவது? எங்கே சமர்ப்பிப்பது 


⭐நமக்கு வழங்கப்படும் காக்கி உறையின் உள்ளே,
1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A)
2. வாக்குச் சீட்டு 
3. இரண்டு உறைகள் (A Cover & B Cover)
4. வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) உள்ளிட்டவை இருக்கும்.

📦வாக்களிப்பதற்கான வழிமுறை (FORM 13D) படிவத்தைத் தனியே எடுத்து உங்கள் வசமே வைத்துக் கொள்ளுங்கள். இதை உறையில் வைத்து அனுப்பத்தேவையில்லை.

1. உறுதிமொழிப்படிவம் (FORM 13A) :


வாக்காளராகிய நீங்கள் கொடுக்க வேண்டிய உறுதிமொழிப்படிவம் இரு பக்கங்களில் இருககும். இதில் முன்பக்கம் மட்டும் நிரப்பினால் போதும். கையொப்பமிடத் தெரியாத / இயலாதவர்களுக்குத் தான் பின் பக்கம்.

⏩உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட வேண்டிய *தொடர் எண் என்பது, தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குச்சீட்டின் வரிசை எண்.* இந்த எண் வாக்குச் சீட்டின் பின்புறம் / மேல் பகுதியில் அச்சிடப்பட்டிருக்கும்.

🔥உறுதிமொழிப் படிவத்தின் மேல்பகுதியில் இடும் உங்களின் கையொப்பமும், வெளி உறையில் (B cover) இடும் கையொப்பமும் ஒரேமாதிரியாக இருக்க வேண்டும்.


🔥உறுதிமொழிப் படிவத்தின் கீழ்ப் பகுதியில் A / B grade அலுவலர்களிடம் சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.

 பெரும்பாலும் பயிற்சி மையத்திலேயே இதில் சான்றொப்பமிட வட்டாட்சியர்கள் தயார்நிலையில் இருப்பர். வெளியிடங்களில் பெற வேண்டுமெனில் உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், அரசு மருத்துவர் உள்ளிட்டோரிடம் சான்றொப்பம் பெறுவது சிறந்தது.

🚀சான்றோப்பத்துடன் சார்ந்த அலுவலரின் Seal-ஐயும் பெற மறவாதீர்.

🚀2. வாக்குச் சீட்டு :


🧾தங்களது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அடங்கிய வாக்குச் சீட்டில் தங்களது வாக்கினை தாங்கள் தேர்வு செய்யக்கூடிய தமிழ்நாட்டின் நலன் பேணும், மக்களின் நலனிற்காகத் தொடர்ந்து இயங்கக்கூடிய கூட்டணியின் / கட்சியின் வேட்பாளரது சின்னத்தில் Ball Point பேனாவில் Tick அடித்து, முன்னர் மடிக்கப்பட்டபடியே மடிக்கவும்.

♀️ஏதேனுமொரு சின்னத்தில் நீங்கள் அடிக்கும் டிக்கைத் தவிர்த்து வேறு எந்தவிதக் குறியீடோ கையொப்பமோ வாக்குச்சீட்டில் இடப்படக் கூடாது.

🔥3. உறை A :

cckkalviseithikal 
A உறையின்மேல் FORM 13B என்ற தலைப்பிட்டு சில விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

வாக்குச் சீட்டின் வரிசை எண்ணை A உறையின்மேல் உரிய இடத்தில் எழுதவும்.

அதன்பின், டிக் அடித்து மடித்து வைத்திருக்கும் வாக்குச் சீட்டினை A உறையினுள் வைத்து உறையை ஒட்டிவிடவும்.

🔥4. உறை B :


B உறையின் மேல் FORM 13C என்ற தலைப்பிட்டு சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அலுலர் முகவரி உள்ளிட்ட விபரங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

cckkalviseithikal 
🛑B உறையின்மேல் இடது புறத்தில் தங்களது கையொப்பத்தை இட வேண்டும். இக்கையொப்பம் முன்னர் உறுதிமொழிப் படிவத்தில் இடப்பட்ட தங்களது கையொப்பத்தை ஒத்திருப்பது அவசியம்.

இதன்பின் பூர்த்தி செய்யப்பட்ட உறுதிமொழிப் படிவம் மற்றும் வாக்குச் சீட்டு வைத்து ஒட்டப்பட்ட உறை A ஆகிய இரண்டையும் B உறையின் உள்ளே வைத்து உறையை ஒட்டிவிட வேண்டும்.

 தங்களது அஞ்சல் வாக்கு தயார்.

இனி, இந்த B உறையை பயிற்சி மையம் / தங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office) உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.

cckkalviseithikal 
மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், அருகிலுள்ளதங்களது தொகுதிக்கான துணை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Taluk Office) / தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் (Collector Office) உள்ளிட்ட இடங்களில் உள்ள அஞ்சல் வாக்கிற்கான பெட்டிகளில் போட்டுவிடலாம்.


மேற்படி இடங்களுக்கு நேரில் செல்ல இயலவில்லை எனில், அருகிலுள்ள அஞ்சலகத்தில் / அஞ்சல் பெட்டியில் அளித்துவிட்டால், அஞ்சல்துறை சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமே கொண்டு சேர்த்துவிடும். இதற்கென Stamp ஏதும் ஒட்டத் தேவையில்லை.

நீங்கள் அனுப்பும் அஞ்சல் வாக்கு பூர்த்தி செய்யப்பட்ட உறை, மே-2-2021 அன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன் தங்களது தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தை அடைந்திருக்க வேண்டும். 

இதற்கு ஒரு மாத கால அவகாசமிருப்பினும் ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குள் சேர்த்துவிடுவது நல்லது. 

Post a Comment

0 Comments