💫cckkalviseithikal💫
❌புகார் மீது புகார் - வட்டாரக் கல்வி அலுவலருக்கு (BEO) கட்டாய ஓய்வு அளித்து இயக்குநர் உத்தரவு.
![]() |
| CCK News |
⏩தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை வட்டாரக் கல்வி அலுவலராக அருண் குமார் பணியாற்றினார்.
🌀திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த போது புகார்கள் எழுந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் தேனி மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.
📌இவரை 2025 அக்டோபர் 27 இல் மீண்டும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கல்வி மாவட்டம், தொப்பம்பட்டி வட்டாரக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்து தொடக்கல்வித்துறை உத்தரவிட்டது.
📌அக்டோபர் 28 இல் க.மயிலாடும் பாறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
🏷️பணியிடமாறுதல் உத்தரவுக்கு எதிராக உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
❌புதிய பணியிடத்தில் சேராமல் காலம் தாழ்த்தினார். 2026 ஜனவரி 5 இல் அவரை 'சஸ்பெண்ட்' செய்து தொடக்ககல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.
❌இந்நிலையில் அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 Comments