🛑மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு
மத்திய அரசின் அறிவிப்பு விவரம் 👇
![]() |
| CCK DA |
cckkalviseithikal
⭐மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் கூடுதல் தவணை மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றை 01.01.2026 முதல் வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
🛑பதிவிட்ட நாள்: 18 ஏப்ரல் 2026, பிற்பகல் 3:13, PIB டெல்லி
📌பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, விலை உயர்வை ஈடுசெய்யும் வகையில்,
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும்
- ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணம் (DR) ஆகியவற்றின் கூடுதல் தவணையை
- 01.01.2026 முதல் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் தற்போதுள்ள 58% என்ற விகிதத்தை விட 2% கூடுதலாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
💥அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டின் அதிகரிப்பின் காரணமாக அரசு கருவூலத்திற்கு ஏற்படும் ஒருங்கிணைந்த தாக்கம் ஆண்டுக்கு ரூ.6791.24 கோடியாக இருக்கும். இதனால் சுமார் 50.46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.27 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
⭐இந்த ஊதிய உயர்வு, 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அமைந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்திற்கு இணங்க உள்ளது.

0 Comments