💫cckkalviseithikal💫 17.04.2026 முதல் கோடை விடுமுறை-மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

💫cckkalviseithikal💫
17.04.2026 முதல் கோடை விடுமுறை-மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் விவரம் 👇 



CCK Director Proceedings 



17.04.2026 முதல் கோடை விடுமுறை-மாணவர்கள் பாதுகாப்பாக இருத்தல் மற்றும் பயனுள்ள வகையில் விடுமுறையை கழித்தல் பெற்றோர்களுக்கு வேண்டுகோள்-சார்ந்து கல்வி இயக்குநரின் செயல்முறைகள் 


அனைத்து மாணவர்களுக்கும் 17-04-2026 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் தெரிவிக்கப்படுகிறது.


CCK Director Proceedings 


🚀மாணவர்களின் பாதுகாப்பு


  • கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவு தண்ணீரை அருந்த செய்யுங்கள். 

  • சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளைப் பயன்படுத்த அறிவுறுத்துங்கள். 

  • உச்ச சூரிய வெப்ப நேரத்தைத்தில் வெளியே செல்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்கவும் (காலை 10-மாலை 4) அறிவுறுத்துங்கள். 

  • ஆபத்தான பொருட்களைப் மாணவர்களின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பாக வைக்கவும். 

  • மாணவர்கள் நீர் நிலைகளில் நீச்சல் தெரியாமல் சென்று குளிக்க முற்படும் போது நீரில் மூழ்க வாய்ப்பு உள்ளது. 

  • எனவே விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டைபோன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம்.

📢மாணவர்களின் மனநலம் காத்தல்


  • பள்ளி கோடை விடுமுறைநாட்களில் சில மாணவர்கள் தங்கள் உடல் மற்றும் மன நலனைப் பாதிக்கும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும். 

  • தனிமை உணர்வுகளைத் தடுக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், உணவு அருந்துதல், இசை நிகழ்ச்சிகளை கவனித்தல் போன்றவற்றின் மூலம் சமூக தொடர்புகளை ஊக்குவிக்கவும் மனநலனை பேணவும் முடியும்.

  •  தொலைகாட்சி மற்றும் கைபேசி ஆகியவற்றை பார்பதில் அதிகமான நேரத்தை செலவிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

🚀ஆரோக்கியமான உணவு


  • மாணவர்களின் வளர்ச்சிக்கு சமர்ச்சீரான உணவு அளிப்பது அவசியம். 

  • அதனை உறுதி படுத்தும் விதமாக பராம்பரிய உணவு வகைகளை தயார் செய்து அளியுங்கள். 

  • கோடை காலத்தை எதிர்கொள்ள ஏதுவாக கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகளை மாணவர்களுக்கு வழங்குங்கள்

cckkalviseithikal

📢கல்வி இணை செயல்பாடுகள்


  • பெற்றோர்கள் மாணவர்களை அருகாமையில் உள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று ஒரு மணி நேரமாவது புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கவும். 

  • அவர்களின் ஆர்வங்களைப் பொறுத்து காமிக்ஸ் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள். சீறார் கதைகள். நீதி நூல்கள் மற்றும் பெருந்தலைவர்கள் பற்றிய நூல்களை படிக்க அறிவுறுத்துங்கள். 

  • இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கவும்.

⏩ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு


  • மாணவர்கள் காலை மற்றும் இரவு இரண்டு வேளை பல் துலக்குதல்

  • காலை மற்றும் மாலை இரண்டு வேளை குளித்தல் போன்ற பழக்கங்களை ஊக்குவியுங்கள். 

  • பெற்றோர்களுக்கு உதவியாக சிறு சிறு வேலைகளை செய்ய பழக்கப்படுத்துங்கள். 

  • வீட்டுத் தோட்டத்தினை பராமரிக்கவும் புதிய பூச்செடிகளை நடவு செய்து வளர்க்க ஊக்கப்படுத்துங்கள்.


📢குடும்பம் மற்றும் சமூக நேரம்


தாத்தா பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்துங்கள். மேலும் பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்குங்கள்.

📢பள்ளி தலைமையாசிரிகளுக்கு மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


_பள்ளிக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments