🚀தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ். மீண்டும் மறு பயிற்சி.
🎤மாவட்டத் தேர்தல் பணிகளில் பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றுவோருக்கு 3 கட்ட பயிற்சி நடக்க உள்ளது. மார்ச் 28 இல் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்க 14 ஆயிரத்து 780 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலனோர் பள்ளி ஆசிரியர்கள்.
🛑1666 பேர் 'ஆப்சென்ட்
ஆண்டு இறுதித்தேர்வு நெருங்கும் நிலையில் பல ஆசிரியர்கள் பங்கேற்க வில்லை. 1666 பேர் 'ஆப் சென்ட்' ஆகியுள்ளனர்.
🛑இவர்களிடம் அந்தந்த தொகுதி கல்வித்துறை அலுவலகத்தில் ஏப்ரல் 1, 4. 6ம் தேதிகளில் விசாரணை நடக்க உள்ளது. ஆப் சென்ட்" ஆனவர்களுக்கு தனிப்பயிற்சி நடத்தப்பட உள்ளது.
இதைதொடர்ந்து எப்ரல் 11 இல் இரண்டாம் கட்ட பயிற்சி, ஏப்ரல் 20ல் விடு பட்டவர்களுக்கு பயிற்சி, ஏப்ரல் 22 ல் மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடக்க உள்ளது.
🛑தகுதியில் குழப்பம்
உயர்பதவியில் உள்ளோர் ஒட்டுச்சாவடி கீழ்நிலை அலுவலராகவும், மேல் நிலையில் நிலையில் உள்ளவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
🛑இதுபற்றி தேர்தல் அதிகாரிகளிடம் கேட்ட போது,
"ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்டம் (ஐ.எப்.எச்.எம். எஸ்.,) போர்ட்டலில் உள்ள படி சம்பள அடிப்படை யில் பட்டியல் பெற்று நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி புதிதாக பணியில் சேர்ந்த அலுவலர் குறைந்த சம்பளம் பெறுவதால் கீழ்நிலை பணியில் இருப்பார்.
பணிமூப்பு அடிப்படையில் மற்றொரு ஊழியர் கூடுதல் சம்பளம் பெறுவார். அவர் மேல் நிலை பணியில் இருப்பார்.
இதனால் ஏற்பட்ட குழப்பமே இதற்கு காரணம்.
இதனை சரிசெய்ய அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
![]() |
| CCK News |
📢ஒருமையில் திட்டிய கல்வி அதிகாரி
மார்ச் 28 இல் நடந்த பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியை ஒருவரிடம் திருப்பரங்குன்றம் வட்டாரக் கல்வி அலுவலர் அலைபேசியில் விளக்கம் கேட்டார்.
அப்போது 'மார்ச் 30 இல் ஓய்வு பெறவுள்ளதால் அழைப்பு கடிதம் வரவில்லை' என ஆசிரியை விளக்கம் அளித்தார். அதை ஏற்காத அதிகாரி ஒருமையில் திட்டிய ஆடியோ வைரலாகிறது.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "ஒருவர் ஓய்வுபெற மாதம் இருந்தால் அவருக்கு தேர்தல் பணி ஒதுக்கக் கூடாது என தலைமைச் செயலர் உத்தரவு உள்ளது. அதுதெரியாமல் அந்த அதிகாரி ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம்' என்றனர்.

0 Comments