ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற TET தேவை உச்சநீதிமன்ற வழக்கு நிலவரம் - டிட்டோஜாக் விளக்கம்.
Click here
"ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்" என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பிலும், டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் 221பேர் சார்பிலும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)அவசியம் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்தும், ஆதரித்தும் 25 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன.
25வழக்குகளையும் ஒரே வழக்காக (Club)உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வருகிறது.
டிட்டோஜாக் பேரமைப்பின் இணைப்புச் சங்கங்களின் உறுப்பினர்கள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு 14.12.2023ல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு (Filed), 09.02.2024ல் சரிபார்க்கப்பட்டு (Verified) அனுமதிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நமது தரப்பு வழக்கறிஞராக சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு M.P.பார்த்திபன் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
SAKUNTHALA VS THE UNION OF INDIA என்பதுதான் உச்ச நீதிமன்றத்தில் நம்முடைய வழக்காகும்.
இவ்வழக்கில் டிட்டோஜாக் என்ற பெயரில் வழக்கு எதுவும் தொடுக்கப்படவில்லை என்பதையும், நமது வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பாதிக்கப்பட்ட 221 உறுப்பினர்களை மனுதாரர்களாகக் கொண்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் பொறுப்பாளர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (13.09.2024) விசாரணக்குப் பட்டியலிடப்பட்டு மீண்டும் 15.10.2024க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து நமது தரப்பு வழக்கறிஞர்களுடன் தொடர்பில் உள்ளனர் என்ற விவரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
நமது வழக்கு விவரம் இத்துடன் Pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.
தகவல் பகிர்வு
ச.மயில்
டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்.
பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
0 Comments