ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயன்று வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஈரோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

 ஆசிரியையின் வீட்டை அபகரிக்க முயன்று வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஈரோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்.




கோபியில் ஆசிரியை வீட்டை அட மானம் வைத்து பெற்ற ரூ.15 லட்சம் கடன் தொகையை திரும்ப செலுத்தியும், வீட்டை அப ரிக்க முயன்று, வீட்டை சூறையாடி எஸ்சி, எஸ்டி வழக்கில் சிக்கிய ஈரோடு அரசு பள்ளி தலைமை ஆசி ரியர் முத்துராமசாமியை பள்ளிக்கல்வித்துறை தற் காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.


ஈரோடு மாவட்டம் கோபி நாகர்பாளையம் நஞ்சப்பா நகரை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி மனைவி பிரபா (48). இவர், கோபி அருகே வண்ணாந்துறைப் புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு, ஒரு மகள், மகன் உள்ளனர். பிரபா கடந்த 2014ம் ஆண்டு குடும்ப செலவிற்காக, ஈரோடு சொட்டையம்பாவை யத்தை சேர்ந்த ஈரோடு பெரியார் வீதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான முத்துராமசாமி என்பவரிடம் வீட்டை அட மானம் வைத்து ரூ.15 லட்சம் கடன் பெற்றார்.


இதற்கான அசல் மற்றும் வட்டி என மொத்த பணத் தையும் பிரபா செலுத்தி உள் ளார். ஆனால், தலைமை ஆசிரியர் முத் துராமசாமி, பணத்தை பெற்றுக்கொண்டு பிரபா பெயருக்கு வீட்டை எழு தித்தராமல் அபகரிக்க முயன்றார். இதையடுத்து முத்துராமசாமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி, அவரது ஆதரவாளர் களுடன் பிரபா வீட்டிற்கு சென்று வீட்டிற்குள் இருந்த பீரோ, கட்டில், பிரிட்ஜ், வாஷிங்மெசின், பீரோவை சூறையாடினர். மேலும் பிராபாவையும் அவரது குடும்பத்தினரையும் சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த னர். cckkalviseithikal


இது குறித்து பிரபா கோபி போலீஸ் ஸ்டேஷ னில் அளித்த புகாரின்பேரில், போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் முத்து ராமசாமி உட் பட அவரது ஆதரவாளர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பரமசிவம் துறை வாரியான விசா ரணை நடத்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ் வழிகாட்டுத லின்படி கடந்த 28ம் தேதி தலைமை ஆசிரியர் முத் துராமசாமியை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தர விட்டார். உத்தரவு நகலை முத்து ராமசாமியிடம் பள்ளி கல்வித்துறை அலு வலர்கள் நேரில் வழங்க சென்றபோது, அவர் பெற் றுக்கொள்ளாததால், பதிவு தபால் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. இத்தக வலை பள்ளிக்கல் வித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர்



.

Post a Comment

0 Comments