💫cckkalviseithikal💫 🛟பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்செயின் பறிப்பு.

💫cckkalviseithikal💫
🛟பள்ளி வளாகத்திற்குள் புகுந்து ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்செயின் பறிப்பு.


CCK News



🛟தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 பவுன் தங்கத் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


🛟தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.


🛟இந்நிலையில், இன்று 29.07.2026 புதன்கிழமை பிற்பகல் 1:45 மணியளவில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காகப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.


🛟சங்கிலியைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட சங்கிலியின் மதிப்பு ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


🛟இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.


🛟தப்பி ஓடிய கொள்ளையனைப் பிடிக்க மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments