📢மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) கூடுதல் வீடுகள் இருந்தால் இன்னொரு கணக்கெடுப்பாளரை நியமிக்கலாம். முக்கிய அறிவிப்பு.
![]() |
| CCK Census |
📢அனைத்து சார்ஜ் அலுவலர்கள் கவனத்திற்கு
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு – 2027 – கட்டம்–I (01.08.2026 முதல் 30.08.2026 வரை)
1. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு – 2027 கட்டம்–I பணிகள் 01.08.2026 முதல் 30.08.2026 வரை நடைபெறும்.
2. அனைத்து கணக்கெடுப்பாளர்களும் முதல் 2 நாட்களுக்குள் களப்பணியில் (Field Visit) ஈடுபட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிளாக்கை (Block) அடையாளம் காண வேண்டும். கள ஆய்வு மேற்கொண்டு, வழங்கப்பட்ட படிவத்தில் மேப்பை வரைந்து சரிபார்க்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக வீடுகள் இருப்பின், அப்பகுதியை தனி பிளாக்காக (Block) பிரித்து, கூடுதல் கணக்கெடுப்பாளரை நியமிக்க முதல் இரண்டு நாட்களுக்குள் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். அதன்பிறகு மாற்றங்கள் மேற்கொள்ள இயலாது. எனவே, இவ்வழிமுறைகளை அனைத்து கணக்கெடுப்பாளர்களுக்கும் தெளிவாக விளக்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும்.
3. அனைத்து கணக்கெடுப்பாளர்களுக்கும் (Enumerators) பணி நியமன ஆணைகள் 01.08.2026-க்கு முன்பாக கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
4. மேற்பார்வையாளர்கள் (Supervisors), அனைத்து கணக்கெடுப்பாளர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
5. முதல் 3 நாட்களில், மேற்பார்வையாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, அனைத்து கணக்கெடுப்பாளர்களும் பணியைத் தொடங்கி, ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.
6. மேற்பார்வையாளர்கள், கணக்கெடுப்பாளர்களின் பணிகளை தினந்தோறும் களத்தில் கண்காணித்து, பணியின் முன்னேற்றத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
7. கள ஆய்வின்போது கண்டறியப்படும் குறைகள், சிக்கல்கள் அல்லது தேவையான உதவிகள் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட சார்ஜ் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
8. சார்ஜ் அலுவலர்கள், கணக்கெடுப்புப் பணிகள் சீராகவும், காலக்கெடுவிற்குள் நிறைவடையும் வகையிலும் முழுமையான மேற்பார்வையுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
9. அனைத்து சார்ஜ் அலுவலர்களும் தங்களது சார்ஜ் எல்லைக்குட்பட்ட கணக்கெடுப்புப் பணிகளில் 20.08.2026-க்குள் குறைந்தபட்சம் 75% பணிகளை நிறைவு செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கண்ட அறிவுறுத்தல்கள் அனைத்தும் தவறாது பின்பற்றப்பட வேண்டும்.
கோவை மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பொறுப்பு அலுவலரின் தகவல்.

0 Comments