🧑🤝🧑👭பொதுமக்கள் சுயமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.
👭👬மக்கள் தொகை கணக்கெடுப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பமும் தாங்களே சுயமாக இணையதளம் மூலம் லேப்டாப் அல்லது மொபைலில் தகவல்களை பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இணையதளத்தில் கீழ்கண்ட தங்களது குடும்ப விபரங்களை பதிவு செய்யலாம்.
இணையதள முகவரி 👇
Click here
![]() |
| CCK Census 2027 |
1. முதலில் மாநிலத்தை தேர்வு செய்து captcha கொடுத்து Verified & Proceed கொடுங்கள், அதன்பிறகு OK கொடுங்கள்.
2. Name of the Head of the Household ல் குடும்ப தலைவரின் பெயரை கொடுங்கள் (கணவர், மனைவி அல்லது குடும்பத்தை நடத்த கூடிய யார் பெயரை வேண்டுமானாலும் கொடுக்கலாம்), அடுத்து உங்கள் குடும்பத்தில் உள்ள ஒரு மொபைல் நம்பரை கொடுங்கள். Email இருந்தால் கொடுங்கள். அதன்பிறகு Verified & Proceed கொடுங்கள்
3. Language செலக்ட் செய்து, உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண்ணை பதிவு செய்து Verify OTP கொடுங்கள், அடுத்து OK கொடுங்கள்.
4. Step 1 - அடுத்து Boundary கேட்கும். OK கொடுங்கள். அதில் மாநிலத்தை காண்பிக்கும், அதன் கீழ் மாவட்டத்தை தேர்ந்தெடுங்கள். அதன் கீழ் உங்கள் ஊரின் PINCODE கொடுங்கள். அதன் கீழ் உங்கள் வீடு அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து Search கொடுங்கள். Map காண்பிக்கும். அதில் 4 பக்கமும் உள்ள கொடு காண்பிக்கும், அதில் உங்கள் வீடு அருகே அதன் நடு இடத்தை கொண்டு வைத்து Confirm Location கொடுத்து Yes கொடுங்கள்.
5. Step 2 - வீட்டின் தரையின் முதன்மையான பொருள் கேட்கும் - அதற்கு Cement/ Tiles என கொடுங்கள். அடுத்து சுவற்றின் எதனால் கட்டப்பட்டது என கேட்கும், அடுத்து கூரை எதனால் ஆனது என கேட்கும், அடுத்து வீட்டின் condition கேட்கும், Good அனைத்தையும் கொடுத்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.
6. Step 3 - உங்கள் குடும்பத்தில் எத்தனை நபர்கள் உள்ளனர் என்ற எண்ணை கொடுங்கள். (குடும்பத்தில் இன்று குழந்தை உட்பட அனைத்து நபர்களையும் கொடுங்கள், வேலை நிமித்தமாக வெளியில் எங்கு சென்று இருந்தாலும் அவர்களையும் சேர்த்து கொடுங்கள்). அடுத்து நீங்கள் கொடுத்த குடும்ப தலைவரின் பெயரை காண்பிக்கும். அடுத்து குடும்ப தலைவரின் Sex குறிப்பிடுங்கள். அடுத்து அவர்கள் SC,ST அல்லது other என்றால், சரியானதை Click செய்யுங்கள். அடுத்து வாடகை வீடா அல்லது சொந்த வீடா என குறிப்பிடுங்கள். எத்தனை room உள்ளது (சமையலறை, குளியலறை தவிர) என குறிப்பிடுங்கள். குடும்பத்தில் திருமணமான நிலையில் எத்தனை Couples உள்ளனர் என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.
7. Step 4 - குடிநீர் சம்பந்தமான தகவல்கள். உங்கள் வீட்டிற்கு குடிநீர் எப்படி வருகிறது. குடிநீர் வீட்டுக்குள்ளேயே வருகிறதா, வீட்டில் எலக்ட்ரிக் லைன் வருகிறதா, latrine உள்ளதா, latrine type என்ன, வீட்டு தண்ணீர் எப்படி வெளியேறுகிறது. குளியல் அறை உள்ளதா, LPG Gas உள்ளதா, வீட்டின் முக்கிய fuel என்ன என குறிப்பிட்டு Save & Next கொடுத்து YES கொடுங்கள்.
8. Step 5 - Radio தகவல்கள் - ரேடியோ உள்ளதா, television உள்ளதா, இன்டர்நெட் உள்ளதா, லேப்டாப் உள்ளதா, டெலிபோன் வசதி, பைக் உள்ளதா, கார் உள்ளதா, சாப்பிட உபயோகிக்கும் சமையல் பொருள், கொடுத்து நீங்கள் கொடுத்த மொபைல் நம்பர் சரியா என பார்த்து Save & Next கொடுத்து YES கொடுங்கள்.
9. Step 6 ல் - இதுவரை நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, சரி என்றால் Save as Draft Final Submit கொடுக்கவும். கொடுத்தவுடன் Submitted Successfully என்ற பக்கம் வந்து Your Self Enumeration ID என்ற ஒரு நம்பர் கொடுக்கும்.
அந்த நம்பரை screen shot எடுத்து வைத்து கொண்டு, அடுத்த மாதம் உங்கள் வீடு தேடி வரும் Census Enumerator இடம் காண்பியுங்கள்.

0 Comments