😡20 லட்சம் ஆசிரியர்களை TET தேர்வு எழுத வைத்த பேராசை பிடித்த 30 TET ஆசிரியர்கள்.
![]() |
| CCK TET case |
😡ஆசிரியர் தகுதித் தேர்வு என்னும் கொடூரத் தாக்குதல்
முதன் முதலாக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதவில்லை என்ற புயலைக் கிளப்பியது யார்?
தமிழக ஆசிரியர்கள்.
உயர்நீதிமன்றங்களில் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்று நூற்றுக் கணக்கான வழக்குகளைத் தொடுத்தது யார்?
தமிழக ஆசிரியர்கள்
2022 ஆம் ஆண்டு முதன் முதலாக பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தீர்ப்பினைப் பெறும் நிலையை உருவாக்கியவர் யார்?
தமிழக ஆசிரியர்கள்.
பணியில் தொடர்வதற்கு இல்லையென்றாலும் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம் என்ற தீர்ப்பினைப் பெறும் நிலையை உருவாக்கியது யார்?
தமிழக ஆசிரியர்கள்
உச்சநீதிமன்றத்தில் மீண்டும் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என இறுதித் தீர்ப்பினைப் பெறும் நிலையை உருவாக்கியது யார்?
தமிழக ஆசிரியர்கள்
நாடெங்கிலும் 20 இலட்சங்களுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியது யார்?
தமிழக ஆசிரியர்கள்.
எல்லா பிரச்சனைகளுக்கு முதலும் முடிவுமான காரண கர்த்தாக்கள் யார்?
தமிழக ஆசிரியர்கள்.
என்ன நோக்கத்திற்காக 20 இலட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டுள்ளது?
பத்தாண்டுகளுக்குப் பின் பணியில் சேர்ந்து சுமார் 200000 மூத்த ஆசிரியர்களின் உரிமைகளைப் புதைத்து தான் பதவி உயர்வு பெற வேண்டும் என்பதற்காக!
மூத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 200000
பத்தாண்டுகளுக்குப் பின் நியமிக்கப்பட்ட இளைய ஆசிரியர்களின் எண்ணிக்கை சுமார் 30000
இவர்களில் எத்தனை பேர் நீதிமன்றத்தில் வழக்கினைத் தொடுத்தனர்?
சுமார் 100 பேர்.
100 பேரால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை?
நாடு முழுவதும் 20 இலட்சங்கள்.
நோக்கம் என்ன?
அடுத்தவரை மிதித்து பதவி உயர்வைச் சுவைக்க வேண்டும்.
இவர்களின் வழக்கினால் என்ன நடந்தது?
மூத்த ஆசிரியர்களின் கண்களின் இரத்தக் கண்ணீரும், வேதனையும், மன உளைச்சலும், தற்கொலை எண்ணங்களும்...
பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு என தேர்வுத்தாள் தயாரிக்கப்பட்டதா?
இல்லை.
எத்தனை பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன?
4 பாடங்களில் இருந்து.
தகுதித் தேர்வு மூலம் பணிக்கு வந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவு?
ஆண்டுக் கணக்கில்
மூத்த ஆசிரியர்கள் எத்தனை பாடங்களைக் கற்பிக்கின்றனர்?
அதிகபட்சம் இரண்டு.
புதிய நியமனத்திற்கான தகுதித் தேர்வு போன்று பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் வைக்கப்படுவதால் எத்தனை பாடங்களைப் பயில வேண்டும்?
4 பாடங்களை.
தகுதித் தேர்வுக்குப் புதிதாக பாடங்களைப் படித்து தயாராக வேண்டுமானால் சுமார் எவ்வளவு நாட்கள் பயில வேண்டும்?
குறைந்தபட்சம் 6 மாதங்கள்.
அவ்வளவு நாட்கள் 200000 ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்க முடியுமா?
முடியாது.
பணியாற்றிக் கொண்டே பணியில் இல்லாதோருக்கான தேர்வினை எழுதித் தேர்ச்சி பெறுவதில் சாத்தியக் கூறுகள் உள்ளனவா?
இல்லை.
காலம்போன காலத்தில் இளைய வயதில் சாதித்ததை முதிர்வடைந்த நிலையிலும் சாதிக்கச் சொல்வது சரியா?
இல்லை.
குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட தூரத்தை ஓடிச் சென்று காட்டி பணிக்கு வந்த ஒரு காவலரை 20 ஆண்டுகள் கழித்து அதே சாதனையை மீண்டும் செய்வித்தால்தான் பணியில் தொடர முடியும் என்றும் பதவி உயர்வு பெற முடியும் என்றும் உத்தரவிட முடியுமா?
ஆட்சிப்பணி தேர்வை மீண்டும் ஆட்சியாளர்களை எழுத வைக்க முடியுமா?
தகுதித் தேர்வு என்பது என்ன?
பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு போல ஒரு அடிப்படைக் கல்வித் தகுதி.
அடிப்படைக் கல்வித்தகுதியில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை குறந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?
35%
அப்படியானால் அதே அடிப்படைத் தகுதியான தகுதித் தேர்வில் தேர்ச்சிக்கு நிர்ணயிக்கப்பட வேண்டியது?
35%
அப்படி மாற்றப்பட்டதா?
இல்லை.
இனவாரியாக குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண் 1ம் வகுப்பு முதல் கல்லூரி வரை நிர்ணயிக்கப்படுகிறதா?
இல்லை.
அப்படியானால், அடிப்படைக் கல்வித் தகுதியாகக் கருதப்படும் தகுதித் தேர்வில் மட்டும் இன வாரியாக தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்படுவது சரியா?
இட ஒதுக்கீடு என்பது அரசுப் பணிக்கு மட்டுமே! அடிப்படைக் கல்வித் தகுதிக்கு இல்லை.
என்ன செய்யப்பட வேண்டும்?
அடிப்படைக் கல்வித் தகுதியில் செய்யப்பட வேண்டியது?
தேர்ச்சி பெற எல்லாருக்கும் சமமான குறைந்தபட்ச மதிப்பெண்கள்!
இதைத் தமிழக அரசு செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் நியாயமான கோரிக்கை.
பொருந்தாத தேர்வை சம்பந்தமில்லாத வயதில் வைத்து சித்திரவதை செய்வதைக் கூட ஏற்கிறோம்...அதிலும் பணிவாய்ப்புக்கு மேற்கொள்ளும் உத்திகளை அடிப்படைக் கல்வித் தகுதியில் மேற்கொள்வதில் என்ன நியாயம்?
எல்லாருக்கும் 60 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தோ அல்லது 60 மதிப்பெண்கள் என்பதைக் குறைந்த பட்ச மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்து, தேவைப்படுவோருக்கு மட்டும் பணியனுபவத்திற்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி தேர்வு முடிவுகளை வெளியிட்டால் மட்டுமே அறமாகும்.
தகுதித் தேர்வு என்னும் கொடிய தாக்குதலுக்கு முன்னுரையே தமிழக ஆசிரியர்களால் உருவானது.
எனவே சமமான குறைந்த பட்ச மதிப்பெண்களை நிர்ணயித்தோ அல்லது பணியனுபவத்திற்கு சலுகை மதிப்பெண்களை வழங்கியோ துணிச்சலாக தமிழக அரசு முடிவுரை எழுத வேண்டும் என்ற
ஒற்றைக் கோரிக்கையை மாண்புமிகு முதலைமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகள் சான்றோருக்கும் 2 இலட்சம் ஆசிரியர்கள் சார்பில் பணிந்து கோரிக்கை வைக்கின்றோம்!
அரசுப் பணிக்கு பின்பற்ற வேண்டிய இட ஒதுக்கீட்டின் அம்சங்களை அடிப்படைக் கல்வித் தகுதியில் பின்பற்றுவது பொருத்தமற்றது; நியாயமற்றது; அதர்மமானது!
சில நூறு பேரின் குறுக்கு வழியிலான பதவி ஆசைக்கு 2 இலட்சம் மூத்த ஆசிரியர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்துவிடக் கூடாது என்ற உண்மையையும் எடுத்து வைக்கின்றோம்.
டெட் தேர்வு தாக்குதல்:
தொடங்கிய இடத்திலேயே முடியட்டும்!
Credit goes to the writer

1 Comments
Evlo vakkira ennam
ReplyDelete