📮வாக்குச்சாவடி அலுவலர்களின் (PRO,POs) பணிகள் குறித்த கையேடு.
Click here
![]() |
| CCK Election EVM |
PO 1
cckkalviseithikal
1. Marked Copy of Electoral Roll (குறியீட்டு வாக்காளர் பட்டியல்).
2. MC-ல் சில நபர்களுக்கு A. S. D (Absent, Shift, Death) என குறியீடு செய்யப்பட்டியிருக்கும்.
3. MC-ல் ஆண் என்றால் - Underline
பெண் என்றால் - Round
மூன்றாம் பாலினத்தவர் - Star
சிகப்பு மையினால் குறிக்கவும்
அனுமதி
"பூத் சிலிப்" உடன் வரும் வாக்காளரிடம் EPIC அல்லது தேர்தல் ஆனையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிற அவணங்களில் ஒன்றை சரிபார்த்து அனுமதிக்கவும்.
MC-ல் வாக்காளரின் வரிசை எண் மற்றும் பெயரை சரிபார்த்து உரக்க வாசிக்கவும்.
இரண்டு மணி ரேத்திற்கு 1 முறை ஆண் / பெண் / மற்றவை-யின் எண்ணிகையை PO-விடம் கூற வேண்டும்.
Tally Sheet-லும் ஆண் / பெண் / மற்றவை குறிக்கப்பட வேண்டும்.
EDC இருந்தால் MC-ல் கடைசியில் பதிவு செய்ய வேண்டும்.
அனுமதி இல்லை
"பூத் சிலிப்" மட்டும் கொண்டு வரும் வாக்காளரை அனுமதிக்ககூடாது. (யூத் சிலிப் என்பது வாக்கு சாவடியை அடையாளம் கார்பதற்கு மட்டுமே பயன்படும்)
EPIC இருந்து MC-ல் பெயர் இல்லை எனில் அனுமதிக்ககூடாது.
PB (Postal Ballot) என MC-ல் குறிக்கப்பட்ட வாக்காளர் வந்தால், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.
cckkalviseithikal
PO 2
1. 17 A புத்தகத்தில் (Register of Voters):
a. POI வாசிக்கும் வாக்காளரின் வரிசை எண்-ஐ எழுத வேண்டும்.
b. EPIC- முழு எண்களையும், மற்ற ஆவணங்களின் கடைசி 4 எண்களையும் எழுத வேண்டும்.
C. வாக்காளரின் கையொப்பம் அல்லது கைரேகை வாங்க வேண்டும்.
2. Voter Slip-ல் வாக்காளரின் வரிசை எனர் மற்றும் பெயர் ஆகியவை எழுதி கையொப்பமிட்டு கொடுக்க வேண்டும்.
3. அழியாத மை வைக்க வேண்டிய இடம்:
A. இயல்பானவர் இடது கை ஆல் காட்டி விரல்
b. Proxy
C. பார்வையற்றிவரின் உதவியாளர் வலது கை ஆள்காட்டி விரல்
4. அழியாத மை-ஐ நுனிநகம் முதல் விரல் மூட்டு வரை வைக்க வேண்டும்.
5. புத்தகத்தில் (17A) - வாக்கு பதிவு ஆரம்பம் / முடிவின் போது "வாக்குபதிவு ஆரம்பம் / முடிவு" மற்றும்
"வாக்குபதிவு எண்ணிக்கை"-யை எழுதி PO, PO2 மற்றும் முகவர்கள் ஆகியோரிடம் கையொப்பம் பெற வேண்டும்.
6. ASD வாக்காளர் வந்தால் அவர்களிடம் கையொப்பம் மற்றும் கைரேகை இரண்டையும் வாங்க வேண்டும்.
7. EPIC வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மற்ற ஆவணங்கள் வாக்காளர் எண்ணிக்கை-யை கட்டாயமாக குறிக்கப்பட வேண்டும்.
8, 17A-ல் பூர்த்தி செய்யப்ட்ட பக்கத்திலும் PO கையொப்பமிட வேண்டும்.
9, 17A-ல் வாக்காளர் விவரங்களை பூர்த்தி செய்யத பின்னர், அந்த வாக்காளர் கையொப்பம் அல்லது
கைரேகை இட மறுத்தார் எனில், அவரை வாக்களிக்க அனுமதிக்கக்கூடாது.
PO 3
1. விரலில் அழியா மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. Voter Slip-ஐ பெற வேண்டும் ன.
3. Control Unit-ல் உள்ள Ballot பட்டனை அழுத்தி வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.
4. வாக்களித்த பின் BEEP சத்தம் வந்ததை உறுதி செய்த பின்னர் தான் வாக்காளரை வெளியில் செல்ல அனுமதிக்க வேண்டும். (PO3-யின் முக்கிய பணி)
5. ஒவ்வொரு முறையும் வாக்கு பதிவானதை உறுதி செய்த பின்பு தான் அடுத்த வாக்காளருக்கு Ballot பட்டனை அழுத்த வேண்டும்.
6. Voter Slip-களை வரிசையாக 50 என்ற எண்ணிக்கையில் கட்டுகளாக கட்டி வைக்க வேண்டும்.
7, கடைசி வாக்காளர் வாக்களித்த பின்பு PO மற்றும் முகவர்கள் முன்பு CLOSE-ஐ அழுத்தவும்.
![]() |
| CCK Election Envelope |


0 Comments