cckkalviseithikal💫 2026 - 27 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகளைத் தொடங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

💫cckkalviseithikal💫

📔2026 - 27 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைப் பணிகளைத் தொடங்க தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.

 மற்றும் 

📢வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை.👇

சுருக்கம்

🎯பள்ளிக் கல்வி பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 ஆம் தேதி முதல் பணிகள் நடைபெற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடுதல் ஆணை

Click here

CCK GO



🎯அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1 முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை (3)யில் காணும் அரசாணையில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

🔶மேற்படி அரசாணையில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கவனமுடன் பின்பற்றி 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் 01.03.2026 முதல் தொடங்கிட அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🌀மேலும், அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5+ வயதுடைய குழந்தைகளை அந்தந்தக் குடியிருப்புப் பகுதிகளில் (Habitation and Catchment Area) அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்கை செய்வதற்கும் அங்கன்வாடி மையங்கள் அல்லாது வேறு பள்ளிகளில் இருந்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு


cckkalviseithikal

📄சேர்க்கை ஆக விரும்பும் குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு அல்லாது பிற வகுப்புகளுக்கு சேர்க்கை ஆக விரும்பும் மாணவர்களுக்கு உரிய வகுப்புகளுக்கான சேர்க்கை இடங்களை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் வழங்கிட தேவையான அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக வழங்கிடுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • 🎯அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் பல்வேறு நலத்திட்டங்கள்
  • திறன் வகுப்பறைகள் (Smart Class Rooms)

  • உயர் தொழில் நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Labs) 

  • இன்றைய டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கணினிசார் அடிப்படை அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தும் 

  • TN - SPARK திட்டம் மற்றும் 

  • மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் 

  • போன்றவை குறித்த விழிப்புணர்வினை அனைத்து பொது மக்கள் மற்றும் அனைத்து பள்ளி வயது குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்திடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🎯அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களைக் கூடுதலாக சேர்க்கை செய்யும் அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசால் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

🌀வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவித்து 2026-27ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் கணிசமான அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தினை அதிகரித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • ⭐இந்நிகழ்வில் 
  • மாவட்ட ஆட்சியர் மற்றும் 

  • முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனைகளை பெற்று 

  • மாவட்டக் கல்வி அலுவலர்கள் செயல்படவும் 

  • உள்ளாட்சி பிரதிநிதிகள்

  • கற்றல் கற்பித்தல் பணியில் ஈடுபாடுடைய உள்ளூர் பிரமுகர்கள்

  • பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்

  • இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் 
  • சுயஆர்வலர்கள் ஆகியோருடன் 

  • பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 

  • ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு அரசுப் பள்ளிகளில்

  •  2026-27ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து சார்நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

⭐மேலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை ஆகும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அறிவுரைகள் வழங்கிடவும் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை வாரம் ஒரு முறை ஒவ்வொரு வட்டாரக் கல்வி அலுவலர்களிடமிருந்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் பெற்று அதன் தொகுப்புறிக்கையை தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.

🔶மார்ச் 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கையினை நடத்தி அதனை எமிஸ் வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments