மாநில ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி 25 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.

மாநில ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி 25 வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.



சென்னையில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத் தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 


இடைநிலை ஆசிரியர்கள்

 சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த மாதம் முதலே ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு புறம் இடைநிலை ஆசிரியர்களும், மறு புறம் பகுதி நேர ஆசிரியர்களும் மாறி மாறி போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்தவகையில், சம வேலைக்கு சமஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக் காந்தி இர்வின் சாலையில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் 25-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர், அப்போது, வெவ்வேறு பகுதிகளில் இருந்து தனி, தனி குழுக்களாக பிரிந்து வந்து காந்தி இர்வின் சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஒன்று கூடினார்கள்.


அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபடுவ தற்கு முன்பாகவே ஆசிரியர் களை கைது செய்து பஸ்சில் ஏற்றினார்கள். இதில் பலர் பஸ் சில் ஏற மறுத்து, சாலை ஓரத் தில் அமர்ந்து போராடினார் கள், சில ஆசிரியர்கள் சாலை யின் நடுவில் படுத்து கொண்ட னர். சிறிது நேரத்தில் போலீ சார் அவர்களை குண்டுக்கட் டாக தூக்கி பஸ்சில் ஏற்றினார் கள் இதனால் போலீசாருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்-தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக்  கைது செய்து பஸ் சில் ஏற்றி வெவ்வேறு மண்டபங்களுக்கு அழைத்துச் சென்றனர்.


 களத்தில் இருந்து நகரமாட்டோம்

 போராட்டத்தின்போது ஆசிரியர்கள் கூறியபோது, 'தி.மு.க தோதல்வாக்குறுதி 311-ஐ நிறை வேற்றும்வரையில் போராட்ட களத்தில் இருந்து நகரப்போவதில்லை போராட்டத்தில் ஈடு பட்ட ஒரு ஆசிரியர் உயிரிழந்த பின்னரும், முதல்-அமைச்சர் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகையோ, அவரது மனைவிக்கு அரசு வேலையோ அறிவிக்கவில்லை. இது கடும் கண்டனத்திற்குரியது எங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும்'என்றனர்

Post a Comment

0 Comments