இன்று 22.12.2025 நடைபெற்ற ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் - அமைச்சர்கள் பேச்சு வார்த்தை விவரம்.
நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வா.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புகளின் பொறுப்பாளர்களுக்கு மட்டும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை 3 மணிக்கு ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் கூட்டம் அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
பேச்சு வார்த்தையில் கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் ஜனவரி 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேல நிறுத்தம் நடைபெறும்.

0 Comments