பள்ளி மேலாண்மைக் குழு தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

பள்ளி மேலாண்மைக் குழு  தலைமையாசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.

Click here



cckkalviseithikal

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-600 006

மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

ந.க.எண்: 107WAII/பமேகு/ஒபக/2025,

பொருள்

: 01.2026

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட குழு A-யை சேர்ந்த 1909 தலைமையாசிரியர்களுக்கு பள்ளிகளின் வழிகாட்டுதல்கள் வழங்குதல் ஒருநாள் பயிற்சி மற்றும் உத்தேச செலவினங்களுக்கு நிதி விடுவித்தல் அனுமதி கோருதல்-சார்பு.

பார்வை

1. அரசாணை (நிலை) எண்: 144 பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை,

நாள் 28.06.2024

2 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள் ந.க.எண். 1077 /A11 / பமேகு / ஒபசு / 2025, நாள் 15.04.2025

பார்வை-(1)ன்படி அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் 2024.2026ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்கள் 2024 ஆகஸ்ட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. பார்வை 2 இல் காணும் வழிகாட்டுதல்களின் படி, சிறந்த முன்மாதிரிப் பள்ளி மேலாண்மைக்குழு செயல்பாடுகளைக் கொண்ட பள்ளிகளைக் கண்டறிந்து மேம்படுத்திடும் வகையில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 3757 பள்ளிகளை தெரிவுசெய்து அப்பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்திப் பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கானத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் வழியாக ஒரு முன்மாதிரிப் பள்ளியாக செயல்படுத்திடத் திட்டமிடப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக குழு A வினை சார்ந்த 1909 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் ஆக்கப்பூர்வமான மாற்றங்களையும். புரிதலையும். ஒத்துழைப்பு கோருவதற்குமான பயிற்சியாக இணைப்பில்-1.இல் காணும் குழு A·வினை சேர்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சியானது 2026 ஜனவரி மாதம் இணைப்பு-3 இல் உள்ளபடி நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.


cckkalviseithikal

பயிற்சி சார்ந்த முக்கிய வழிகாட்டுதல்கள்

1 இப்பயிற்சியானது ஒரு நாள் பயிற்சியாக காலை 9:30 மணி முதல் மாலை 4:30 வரை நடத்திட திட்டமிட்டப்பட்டுள்ளது. எனவே தெரிவுசெய்யப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியார்கள் அனைவரும் பயிற்சி மையத்திற்கு மணிக்குள்ளாக வருகை புரிதல் வேண்டும். காலை 9:00

21 பயிற்சியில் பங்கேற்கும் பள்ளிகளின் தலைமையாசிரியார்கள் பயணம் பயிற்சியினை செலவினங்களை அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து ஒருங்கிணைத்து நடத்தும் மாவட்ட மையங்களில் உரிய விதிகளின்படி பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாநில அலுவலகத்திலிருந்து பயிற்சினை வழங்கச் செல்லும் மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கு பயணச் செலவினங்களைப் மாநில அலுவலகத்திலிருந்து மேற்கொள்ள வேண்டும்.

4) மாநில அலுவலகப் பயிற்சிக் குழுவினர். பங்கேற்பாளர்களுக்கான பணிமனை சார்ந்த செலவினங்கள் (உணவு, குடிநீர், சிற்றுண்டி, தேநீர் மற்றும் இதரச் செலவினங்கள்) பயிற்சி நடத்தும் மாவட்ட மையங்களில் மேற்கொள்ள வேண்டும்.

5) பயிற்சி நடத்துவதற்குத் தேவையான எழுதுபொருட்கள், சார்ட் பேப்பர்ஸ், நோட்புக், Pen, கருத்துவளப் புத்தகங்கள் (Resource Materials), படவீழ்த்தி (Projector), எழுது 1000 (Writing Boards), White Board Markers, Sketch Pens போன்றவற்றைப் போதிய எண்ணிக்கையில் பயிற்சி தொடங்குமுன் பயிற்சி அரங்கில் இருப்பதை பயிற்சி நடத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உறுதிசெய்ய வேண்டும்.

6) பயிற்சி வழங்கும் மாநில முதன்மைக் கருத்தாளர்களுக்கான தங்குமிடம் சார்ந்த செலவினங்களை பயிற்சி நடைபெறும் மாவட்ட மையங்களில் மேற்கொள்ள வேண்டும்.

7) ஒருநாள் பயிற்சியில் பங்கேற்க தெரிவுசெய்யப்பட்ட இணைப்பு-1-இல் காண் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பயிற்சியில் உரிய நேரத்தில் பங்கேற்கவும் மற்றும் இணைப்பு 2-இல் காண் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தளர்கள் பங்கேற்றிடவும் ஏதுவாகப் பணிவிடுப்பு செய்து பயிற்சியில் தவறாது பங்கேற்க அறிவுறுத்திட சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

8) தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் சார்ந்த மாவட்ட மையங்களில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments