🌀பள்ளியில் மாணவர்கள் அட்டூழியம்!! ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!

 🌀பள்ளியில் மாணவர்கள் அட்டூழியம்!! ஆசிரியர்கள் அதிர்ச்சி!!!


திருப்பூர் மாநகராட்சிப் பள்ளியில் தலைமை ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள்! 


திருப்பூர், நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கர்னல், 54. காலாண்டு தேர்வு பணிகளில் நேற்று ஈடுபட்டிருந்த அவர், தனது அறையில் அமர்ந்து பள்ளிக்கு தொடர்ந்து வராமல் நேரடியாகத் தேர்வுக்கு வந்த மாணவர்களிடம். - ஏன் இவ்வளவு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை?" எனக் கேட்டு விசாரித்ததுக் கொண்டிருந்தார்.


Student-News
Student News


அப்போது திடீரென அறைக்குள் புகுந்த பிளஸ் 2 மாணவர்கள் 7 பேர், தலைமை ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு அருகில் இருந்த வகுப்பறையில் இருந்து ஆசிரியர் ஒருவர் ஓடி வந்ததும், மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.


தாக்குதலில் காயமடைந்த தலைமை ஆசிரியரை மீட்டு, ஆசிரியர்கள் கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். 

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. முகத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்ததால், அவரது சட்டையும் ரத்தத்தில் நனைந்திருந்தது. 

மாலை வரை மருத்துவமனையில் இருந்த தலைமை ஆசிரியர், பின்னர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பள்ளிக்கு வந்தார். 

அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். சக ஆசிரியர் அளித்த புகார் காரணமாக பள்ளிக்கு வந்த போலீசார்,  பிளஸ் 2 மாணவர்கள் சிலரை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். 

மேலும், தலைமை ஆசிரியர் அறைக்கு அருகே பணியில் இருந்த ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


கடும் நடவடிக்கை

 முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், "தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியது மோசமான நடத்தை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவறு செய்த மாணவர்கள் மீது தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.


தலைமையாசிரியரை மாணவர்கள் தாக்கிய விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Post a Comment

0 Comments