29.08.2026 சனிக்கிழமை SMC விழிப்புணர்வு கூட்டம் நடத்துதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
Proceedings pdf 👇
Click here
![]() |
| SMC |
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை-600 006
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்: 1338/A11/பமேகு/ ஒபக/2026, நாள். 24/08/2026
பொருள்:
பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் - பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துதல் - 29.08.2026 (சனிக்கிழமை) வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு.
பார்வை:
(1) அரசாணை (நிலை) எண். 144, நாள்: 28.06.2024, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
(2) அரசாணை (நிலை) எண். 143, நாள்: 19.08.2026, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை.
பார்வை-1இல் காணும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி 2024-2026 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உறுப்பினர்களின் பதவிக் காலம் 2026 ஆகஸ்ட் மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு மறுகட்டமைப்பு செய்யப்படவுள்ளது.
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம்
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகளில் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் முழுமையாகப் பங்கேற்பை உறுதிசெய்யும் வகையில் 2026-2028ஆம் ஆண்டுகளுக்கானப் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் சார்ந்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் 29.08.2026, சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும்
cckkalviseithikal
பார்வை-2இல் காணும் அரசாணையில் பக்கம்-22இல் கண்டுள்ள மறுகட்டமைப்பு நாளுக்கு முன்னதாக செய்ய வேண்டியவை" தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும்,
மேலும், பார்வை-2இல் கண்டுள்ள அரசாணையின்படி மாநிலம் தழுவிய பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை அரசாணை வழிகாட்டு நெறிமுறைகள் பக்கம் 9-இல் உள்ள கால அட்டவணைக்கு மாற்றாக, பக்கம் 4, பத்தி x.-இல் உள்ள முன்மொழியப்பட்ட கால அட்டவணையில் உள்ளவாறு நடத்திட அனைத்து வகைப் அரசுப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (CEO) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
![]() |
| SMC Schedule |
அ) கூடுதல் வழிகாட்டுதல்கள்
1. பள்ளியின் தலைமையாசிரியரே பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த வேண்டும்.
2. தவிர்க்கவியலா சூழல்களில் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் அப்பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் கூட்டத்தினை வழிநடத்த வேண்டும்.
3. பொறுப்புத் தலைமையாசிரியர் இல்லாத நேர்வுகளில் பள்ளியின் மூத்த ஆசிரியர் ஒருவர் கூட்டத்தினை வழிநடத்த வேண்டும்.
cckkalviseithikal
4. ஒரு தலைமையாசிரியர் மற்றொரு பள்ளிக்குக் கூடுதல் பொறுப்பு வகித்தால், நிரந்தரத் தலைமையாசிரியர் இல்லாத அப்பள்ளிக்கு, அந்த வட்டார வளமைய மேற்பார்வையாளரே (Block Supervisor) தற்காலிகமாகப் பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) பதவிவழி உறுப்பினராகவும், கூட்ட அழைப்பாளராகவும் (Convenor) முன்னின்று கூட்டத்தினை வழிநடத்த வேண்டும்.
5. ஒரு வட்டாரத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் நிரந்தரத் தலைமையாசிரியர் அல்லது ஆசிரியர்கள் இல்லாத நேர்வுகளில் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) மறுகட்டமைப்பு நிகழ்வுகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகள்:
i. அப்பள்ளிகளின் எண்ணிக்கை விவரங்களை சார்ந்த மாவட்ட/ வட்டாரக் கல்வி அலுவலர்கள் வழியாக SMC DCs உறுதிபடுத்த வேண்டும்.
ii. அத்தகைய பள்ளிகளுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் (Block Supervisor)/வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநரை (BRTE) தற்காலிக ஒருங்கிணைப்பாளர் / கூட்ட அழைப்பாளராக (Convenor) நியமிக்க வேண்டும்.
iii. அவ்வாறு, நியமிக்கப்பட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (Block Supervisors)/ வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs) மூலம் SMC மறுகட்டமைப்பு தொடர்பான பெற்றோர் விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்பு நிகழ்வுகளை உரிய வழிகாட்டுதல்களைப் பெற்று முறையாகத் திட்டமிட்டு நடத்த வேண்டும்.
iv. பார்வை-2இல் காணும் அரசாணை வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வுகள் தொடர்பாக கோரப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் பதவிவழி தலைமையேற்று நடத்தும் தற்காலிக அலுவலர்களான வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (Block Supervisor) / ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs) EMIS School Login வழியாகப் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ள வேண்டும்.
cckkalviseithikal
அப்பள்ளிக்கு நிரந்தரத் தலைமையாசிரியர் பொறுப்பேற்றவுடன், பார்வை-2-இல் உள்ள அரசாணை வழிகாட்டு நெறிமுறைகளின்படி பள்ளி மேலாண்மைக் குழு கூட்ட அழைப்பாளராக செயல்பட வேண்டும்.
vi. மேற்காண் பணிகளை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (CEO) உரிய வழிகாட்டுதல்களைப் பெற்று, சார்ந்த மாவட்ட உதவித் திட்ட அலுவலர் அவர்கள் ஒருங்கிணைத்து செயல்படுத்துதல் வேண்டும்.
6. மேலே சொல்லப்பட்டுள்ள வழிமுறைகள் தவிர அப்பள்ளியில் நிரந்த ஆசிரியர்களாக அல்லாத தற்காலிக ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏனைய பிற பணியாளர்கள் கூட்டத்தினை முன்னின்று வழிநடத்த அனுமதியில்லை.
7. விழிப்புணர்வுக் கூட்டத்தில் திரையிடப்பட தேவையான காணொளிகள், Posters மற்றும் பிற கருத்து வளங்களை கீழ் காணும் QR Code மற்றும் Link வாயிலாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த கேட்டுக்கொள்ள வேண்டும்.
SMC வீடியோ இணைப்பு 👇


0 Comments