பாடப்புத்தகங்கள் முறைகேடாக விற்பனை! வட்டாரக்கல்வி அலுவலர் தற்காலிகப் பணி நீக்கம்!!
கோபி வட்டார கல்வி அலுவலராக கரட்டடிபாளையத்தை சேர்ந்த தேவகி பணியாற்றி வந்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்க வேண்டிய மூன்று பருவத்திற்கான பாட புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கு பள்ளி கல்வித்துறை மூலமாக அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து ஒவ்வொரு பள்ளிக்கும் வட்டார கல்வி அலுவலகம் மூலமாகவே தேவையான பாட புத்தகங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற நிலையில், தேவகி பொறுப்பேற்றதில் இருந்து, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஆசிரியர்களை வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு வரவழைத்து, ஆசிரியர்கள் செலவிலேயே பாடபுத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வந்துள்ளார்.
cckkalviseithikal
அதேபோன்று பாட புத்தகங்களை முறைகேடாக எடுத்துச்சென்று விற்பனை செய்து விட்டதாகவும், அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியது, மாணவர்களுக்கு வழங்கப் பட்ட காலை உணவை நாள்தோறும் முறைகேடாக வீட்டிற்கு கொண்டு சென்றது என அடுத்தடுத்து பல்வேறு புகார்கள் வட்டாரக் கல்வி அலுவலர் தேவகி மீது எழுந்தது.
இதனால், வட்டார கல்வி அலுவலர் தேவகி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக சென்னையில் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதாரத்துடன் புகார் அளித்தனர்.
அதைத்தொடர்ந்து புகார் மீது விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள், பாட புத்தகங்களை முறைகேடாக எடுத்துச்சென்று விற்பனை செய்ததும், காலை உணவு திட்ட உணவை எடுத்து சென்றது உள்ளிட்ட புகார்கள் உண்மை எனத் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குநர், வட்டாரக் கல்வி அலுவலர் தேவகியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விடுப்பில் சென்றுள்ள வட்டாரக் கல்வி அலுவலர் தேவகியிடம் ஓரிரு நாளில் சஸ்பெண்ட் உத்தரவை அதிகாரிகள் வழங்க உள்ளனர்.
0 Comments