🎯மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

🎯மாவட்டக் கல்வி அலுவலர்கள் நேரடி நியமனம் - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.


உத்தரவு விவரம் 👇 

Click here

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் (மு.கூ.பொ) செயல்முறைகள், சென்னை-06.

முன்னிலை திருமதி.ந.லதா

ந.க.எண்.052548/1/81/2020, 31.08.2026.


பொருள்:

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி 2014-17 ஆம் ஆண்டிற்கு தமிழ்நாடு தீர்ப்பாணை அரசுப்பணியாளர் தேர்வாணயத்தினால் தேர்வு செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில் (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021, .29.04.2024) மறு வரையறை செய்யப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலராக நேரடி நியமனம் செய்யப்பட்டவர்கள் பயிற்சி முடித்து முறையான மாவட்டக்கல்வி அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டது பணியிடம் ஒதுக்கீடு செய்து ஆணை வழங்குதல் தெரிவுப்பட்டியலின்படி சார்பு.


cckkalviseithikal

பார்வை:

1. மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.எஸ்.நிர்மல்குமார் உள்ளிட்டவர்களால் தொடரப்பட்ட வழக்கு எண். (W.P.Nos. 19622 of 2020 & 169, 170, 3398, 25424 0 3402 of 2021 தீர்ப்பாணை நாள்.29.04.2024


2. அரசாணை (3டி) எண்.01, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, बी.11.02.2026.

3. -06, செயல்முறைகள். .19.02.2026. தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் ந.க.எண்.052548/1/இ1/2020,

4. அரசாணை (நிலை) எண். 146, பள்ளிக்கல்வித் (ப.க.1(1)) துறை, . 25.08.2026.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 2014-17 ஆம் ஆண்டிற்கு மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களின் தெரிவுப் பட்டியல் சார்ந்து சென்னை உயர்நீதிமன்ற (W.P.Nos.19622 of 2020 & 169, 170, 3398, 25424 & 3402 of 2021. தீர்ப்பாணை நாள்.29.04.2024) மறுவரையறை செய்யப்பட்ட தெரிவுப்பட்டியலை ஏற்பளிப்பு செய்தும், அப்பட்டியலின்படி (1) திரு.S.நிர்மல்குமார். (2)திரு.Z.சூசைமரியநாதன், (3) திருமதி.S.இளையராணி, ஆகிய "03" அலுவலர்களை 06 மாதகால நிருவாக பயிற்சிக்கு மாற்றுப்பணியில் நியமனம் செய்தும், நிருவாக பயிற்சியினை மேற்கொள்ளயேதுவாக 03 மிகைப்பணியிடங்களை தோற்றுவித்தும், பார்வை-2 இல் காணும் அரசாணையின்படி அரசளவில் ஆணைகள் வழங்கப்பட்டது.


2. இதன்தொடர்ச்சியாக சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தங்களது நிருவாக பயிற்சியினை நிறைவுசெய்ததையடுத்து, அன்னார் மாவட்டக்கல்வி அலுவலராக பயிற்சியில் சேர்ந்த நாள் முதல், தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு IV கீழ் வரும் மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் முறையான நியமனம் வழங்கியும். அவரவர் பெயருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிலமர்த்தியும் இதன் வழி ஆணையிடப்படுகிறது.


DEOs
New DEOs


மேற்காணும் அலுவலர்கள் தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி சிறப்பு விதிகளில் விதி 7-இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு மூன்றாண்டு தொடர்பணிக்காலத்திற்குள், இரண்டு ஆண்டுகால தகுதிகாண் பருவத்தினை நிறைவுசெய்ய வேண்டுமெனவும், விதி 8 இல் வரையறுக்கப்பட்டுள்ளவாறு கீழ்க்காணும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



1. நிருவாக அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு (அல்லது)

சார்நிலை அலுவலருக்கான கணக்கு தேர்வு பாகம் 1

2. தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை நூல் தேர்வு.

3. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நிர்வாக தேர்வு தாள்-I

4. தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை நிர்வாக தேர்வு தாள்- II.

5. கல்வித்துறை அலுவலர்களுக்கான தமிழ் சிறப்பு மொழித்தேர்வு (தாய்மொழி தமிழ் அல்லாதவர்கள் அல்லது பள்ளி/கல்லூரியில் தமிழ் படிக்காதவர்கள் மட்டும்).



இவ்வாணையினை பெற்றுக்கொண்டமைக்கான ஒப்புதல், நிர்வாக பயிற்சியிலிருந்து விடுவிக்கப்பட்ட விவரம் மற்றும் முறையான மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடத்தில் பணியில் சேர்ந்த விவரம் ஆகியவற்றினை உடன் இவ்வியக்ககத்திற்கும்/தொடர்புடைய இயக்ககங்கள்/அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள்
cckkalviseithikal

B. பள்ளிக்கல்வி இயக்குநர் 

 மு.கூ.பொ

Post a Comment

0 Comments