🎯சனி, ஞாயிறு பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
![]() |
| Elementary-Director-Proceedings |
சென்னை.6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 013993/1/2026, நாள். 17.08.2026.
🎯பொருள்
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவது தொடர்பாக.
cckkalviseithikal
🎯2026-2027ஆம் ஆண்டுக்கான மேலாண்மை திருத்திய நிலை அறிக்கை மற்றும் சட்டமன்ற கூட்டத் தொடர் 06.08.2026 முதல் 08.09.2026 வரை நடைபெறவுள்ளது.
🎯இந்நிலையில், 43- பள்ளிக் கல்வித் துறைக்கு எதிர்வரும் 24.08.2026 அன்று மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெறவுள்ளதால், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கோரப்படும் சட்டமன்ற வினாக்களுக்கு உடனுக்குடன் பதில் தயார் செய்து இவ்வியக்கத்திற்கு அனுப்பிட ஏதுவாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,
🎯மேலும், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) எந்தவிதமான விடுப்பினை துய்க்கக் கூடாது எனவும்,
🎯தங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் தேவையான பணியாளர்கள் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கண்டிப்பாக சுழற்சி முறையில் இச்சட்டமன்ற கூட்டத் தொடர் முடியும் நாள் வரை பணிபுரிய இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது..
தொடக்கக்கல்வி இயக்குநர்
17/8/26
பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) (மின்னஞ்சல் மூலமாக).
(வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது)
நகல்
அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, தலைமை செயலகம், சென்னை-09 அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்தனுப்பலாகிறது.

0 Comments