🔮தேசிய குடற்புழு நீக்க நாள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் சுற்றறிக்கை.
cckkalviseithikal
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
ந.க.எண்.015200/ஜெ4/2025, நாள்:6.08.2026
![]() |
| CCK Deworming Day |
பொருள்:
தொடக்கக் கல்வி பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை -தேசிய குடற்புழு நீக்க நாள், ஆகஸ்ட் 2026, 2-ஆம் சுற்று மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 04.08.2026 (செவ்வாய்க்கிழமை) மாலை 04.00 மணிக்கு நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்தது சார்ந்து.
பார்வை:
1. அரசு கடிதம் எண். 5373/GL1(2)/2026-1, பள்ளிக் கல்வித் துறை, நாள் 31.07.2026.
![]() |
| CCK Deworming Day |
2. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை 5 . R.No. 14890262/MCH2/A2/2026, फ्रानो: 30.07.2026.
"ஒவ்வொரு குழந்தைக்கும் குடற்புழு நீக்கம் - ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்"
பார்வை 1-இல் காணும் அரசு கடிதத்துடன் இணைத்து பெறப்பட்ட பார்வை 2-இல் காணும் கடிதத்தில் "ஆகஸ்ட் 2026-க்கான 2-ஆம் சுற்று தேசிய குடற்புழு நீக்க நாள் (NDD)" தொடர்பான மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை, தமிழ்நாடு அரசு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் தலைமையில் 04.08.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்வரும் வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 10.08.2026 (திங்கட்கிழமை) தேசிய குடற்புழு நீக்க நாளன்று, 1 முதல் 19 வயது வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் (சேர்க்கை பெற்ற மற்றும் சேர்க்கை பெறாத குழந்தைகள் உட்பட) Albendazole 400 mg மாத்திரை அரசு வழிகாட்டுதலின்படி வழங்கப்பட வேண்டும்.
2 12 வயது குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2-19 வயது மாணவர்களுக்கு முழு மாத்திரையும் வழங்க வேண்டும். மாத்திரை காலாவதி தேதி மற்றும் தரத்தை வழங்குவதற்கு முன் கட்டாயமாக சரிபார்க்க வேண்டும்.
3. மாணவர்கள் காலை உணவு (9.00 மணி) அல்லது மதிய உணவு (2.00 மணி) சாப்பிட்ட பிறகே ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் மாத்திரையை உட்கொள்ளச் செய்ய வேண்டும்.
4. உடல்நலக்குறைவு, காய்ச்சல் அல்லது பிற மருந்துகள் எடுத்துக்கொண்டு இருக்கும் மாணவர்களுக்கு அன்றைய தினம் மாத்திரை வழங்கக்கூடாது. அவர்கள் குணமடைந்த பின், மருத்துவ அலுவலரின் ஆலோசனையின்படி 17.08.2026 (Mop-up Day) அன்று வழங்க வேண்டும்.
cckkalviseithikal
5. ஒவ்வொரு வகுப்பாசிரியரும், தமது வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் மாத்திரையை உட்கொண்டதை உறுதி செய்து, வருகைப் பதிவு மற்றும் மருந்து வழங்கல் பதிவேட்டில் துல்லியமாக பதிவு செய்ய வேண்டும்.
6. குடற்புழு தொற்று ஏற்படும் காரணங்கள், அறிகுறிகள், கைகளை சோப்பால் கழுவுதல், தூய்மையான குடிநீர், கழிப்பறை பயன்பாடு, காலணி அணிதல் போன்ற சுகாதார விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
7. பள்ளியில் மாத்திரை வழங்கும் பணியில் சுகாதாரத் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
8. 17.08.2026 (திங்கட்கிழமை) நடைபெறும் Mop-up Day அன்று, முதல் நாளில் மாத்திரை உட்கொள்ளாத அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் தவறாமல் மாத்திரை வழங்க வேண்டும்.
9. மாத்திரை வழங்கல் தொடர்பான அனைத்து விவரங்களையும் (பெற்ற மாணவர்கள், விடுபட்டவர்கள். Mop-up விவரங்கள்) துல்லியமாக தொகுத்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மேல் அலுவலர்களுக்கு அனுப்ப வேண்டும்.
10. "ஒவ்வொரு குழந்தைக்கும் குடற்புழு நீக்கம் - ஒவ்வொரு குழந்தைக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்" என்ற நோக்கத்துடன், 100% இலக்கை எட்ட அனைத்து ஆசிரியர்களும் முழு பொறுப்புடன் செயல்பட்டு, எந்த மாணவரும் விடுபடாதவாறு உறுதி செய்ய வேண்டும்.
எனவே, மேற்காண் பொருள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அரசுக்கு அனுப்பும் பொருட்டு இவ்வியக்கத்திற்கு அறிக்கையினை ஒரு பக்க அளவில் உடனடியாக அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-தொடக்கக் கல்வி இயக்குநர்


0 Comments