🛟வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட்டிட அனுமதி உள்ளிட்ட முக்கிய 28 அறிவிப்புகள்

 🛟வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கட்டிட அனுமதி உள்ளிட்ட முக்கிய 28 அறிவிப்புகள் விவரம்.

Click here


Announcements
Announcements


1. சுயநிதி திட்டத்தின் கீழ் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.914 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.


பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுயநிதி திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டம் அண்ணா நகர், புரசைவாக்கம், நந்தனம் மற்றும் எர்ணாவூர், கடலூர் மாவட்டம் குண்டுசாலை, மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர், திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் வல்லன்குமாரவிளை ஆகிய இடங்களில் மக்களின் தேவைக்கேற்ப 5.914 கோடி மதிப்பீட்டில் 842 அடுக்குமாடிக் குடியிருப்புகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும்.


2. மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 564 மனைகள் ரூ.45 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.


cckkalviseithikal

பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறந்த குடியிருப்பு பகுதிகளை உருவாக்கும் வகையில் மனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டம் வளசரவாக்கம், சோழிங்கநல்லூர், திருவான்மியூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கடலூர் மாவட்டம் வெளிச்சமண்டலம், சேலம் கடலூர் மாவட்டம் வெளிச்சமண்டலம், சேலம் மாவட்டம் எடப்பாடி, இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, நாமக்கல் மாவட்டம் காடச்சநல்லூர், மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 564 மனைகள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்டு வரப்படும். விற்பனைக்கு கொண்டு


3. வாரிய வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் 20 குடியிருப்புகள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

தமிழ்நாடு வீட்டுவசதி சென்னை மாநகர் சி.ஐ.டி வாரியத்தால் நகரில் சுமார் ரூ.18 கோடி மதிப்பீட்டில் 20 குடியிருப்புகள் வாரிய வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும்.


4. தவணை முறை திட்டத்தில் ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க அபராத வட்டி தள்ளுபடி திட்டம்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் தவணை முறை திட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் ஆகியவற்றிற்கான ஒதுக்கீடு பெற்று 31.03.2026-க்குள் தவணை முறை முடிந்துள்ள திட்டங்களில் தவணை தொகை செலுத்த தவறிய சுமார் 7000 ஒதுக்கீடுதாரர்கள் பயன்பெறும் வகையில் நிலுவை தொகையினை ஒரே தவணையாக செலுத்துபவர்களுக்கு நிலுவை தொகைக்கு வசூலிக்கப்படும்.

 அபராத வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி மற்றும் நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தில் வசூலிக்கப்படும் தொகைக்கான வட்டி (ஐந்து மாதத்திற்குண்டானது மட்டும்) ஆகியவை தள்ளுபடி செய்யப்பட்டு பத்திரம் வழங்கப்படும். இந்த திட்டம் ஓர் ஆண்டிற்கு சிறப்பு திட்டமாக செயல்படுத்தப்படும்.


5. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தீர்வாணம் பகரப்பட்டு வாரிய வசம் ஒப்படைக்கப்படாத நிலங்கள் மற்றும் வாரிய வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்கள் தொடர்பான நீண்ட கால பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒரு சிறப்பு திட்டம்.

பொதுமக்கள் நோக்கங்களுக்காக நிலங்கள் சிறந்த பயன்பாட்டு கையகப்படுத்தப்பட்ட முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் அடிப்படையில், நிலம் கையகப்படுத்துதலுக்கான தீர்வாணம் (Award) பகரப்பட்டு நிலத்தினை நேரடியாக தமிழ்நாடு வீட்டுவசதி ஒப்படைக்கப்படாத இனங்கள் வாரியத்திடம் மற்றும் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பயன்படுத்தப்படாமல் உள்ள நிலங்கள் தொடர்பாக விரிவான கொள்கை கை முடிவும் ஒரு சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். 

இதன் மூலம், பொதுமக்கள் நலனைப் பாதுகாக்கும் வகையிலும் வாரியத்தின் எதிர்கால திட்டங்களின் தேவைகளையும் கருத்தி கொண்டு அத்தகைய நிலங்களை 2 முறையில் பயன்படுத்துதல், திட்டங்களுக்கு பாதுகாக்கும் வகையிலும் வாரியத்தின் எதிர்கால திட்டங்களின் தேவைகளையும் கருத்திற் கொண்டு அத்தகைய நிலங்களை உரிய முறையில் பயன்படுத்துதல், திட்டங்களுக்கு தக்கவைத்துக் கொள்ளுதல் அல்லது தேவைக்கேற்ப விடுவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான வெளிப்படையான மற்றும் தெளிவான நடைமுறை வகுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.


cckkalviseithikal

நகர் ஊரமைப்பு ஆணையரகம்


6. நில உபயோக மாற்ற விண்ணப்பங்களுக்கான முழுமையான இணையவழி செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.


cckkalviseithikal

நில உபயோக மாற்ற விண்ணப்பங்கள் தற்போது சார்நிலை இணையதளம் வழியாக அலுவலங்களில் பரிசீலிப்பது மட்டுமே நடைமுறையில் உள்ளது. அதனை மாற்றி இறுதிவரை இணையதள வழியாக பரிசீலிக்கப்படும் போது விண்ணப்பதாரரின் நேர விரயம் குறைவது மட்டுமல்லாது, விண்ணப்ப பரிசீலனையின் ஒவ்வொரு நிலையையும் விண்ணப்பதாரர் அறிந்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களுக்கான முழுமையான இணையவழி செயல்முறை நடைமுறைப்படுத்தப்படும்.


7. சுய சான்றிதழ் மூலம் வழங்கப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கான பரப்பளவு 5,000 சதுர அடியாக உயர்த்தப்படும்.


தரை (G + தளம் மற்றும் இரண்டு தளம் 2 Floors), தூண் தளம் மற்றும் மூன்று தளம் (Stilt + 3 Floors) கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டட அனுமதி உடனடியாக பெறும் வகையில் சுய சான்றிதழ் மூலம் குடியிருப்பு கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பரப்பளவு தற்பொழுதுள்ள 3,500 சதுர அடியிலிருந்து 5,000 சதுர அடியாக உயர்த்தப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக கட்டட அனுமதி பெறமுடியும்.

8. சிறிய சுய அனுமதி வணிகக் சான்றளிப்பு கட்டடங்களுக்கு மூலம் திட்ட வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

வணிக கட்டடங்களுக்கு திட்ட அனுமதி பெறுவதை எளிமைப்படுத்தும் வகையில், முதல் முறையாக 1,500 சதுர அடி FSI பரப்பளவு வரையிலான வணிகக் கட்டடங்களுக்கு சுய சான்றளிப்பு முறையில் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். இந்நடைமுறையில் மனுதாரர்கள் உள்ளாட்சி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியது தவிர்க்கப்படும்.


9. குடியிருப்பு கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

பொதுமக்கள் உள்ளாட்சி செல்லாமல், எளிதாக அலுவலகங்களுக்கு கட்டட அனுமதி பெறும் வகையில், 8070 சதுர அடி (750 ச.மீ.) FSI பரப்பளவு வரை உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் மூலம் கட்டட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும்.


10. வணிகக் கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

3,230 சதுர அடி (300 ச.மீ.) FSI பரப்பளவு வரை உள்ள வணிக கட்டடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் மூலம் கட்டட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்து, கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மனுதாரர்கள் உள்ளாட்சி அலுவலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் தவிர்க்கப்படும். இதன் மூலம் கட்டட அனுமதி பெறுவது எளிதாவதுடன் வணிக மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவித்து, தொழில் செய்வதை எளிதாக்கி, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.


11. SIDCO, SIPCOT, ELCOT அளிக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் தொழிற்சாலை தொழிற்சாலை அமையும் கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பு சான்றளிப்பு மூலம் கட்டட அனுமதி வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும்.

தொழில் முனைவோர் எளிதாகத் தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தும் வகையில், முதல் முறையாக மூன்றாம் தரப்பு சான்றளிப்பு முறை அறிமுகப்படுத்தப்படும். SIDCO, SIPCOT, ELCOT மற்றும் ஒப்புதல் அளிக்கப்பட்ட தொழிற்சாலை மனைப்பிரிவுகளில் அமையும் 26,900 சதுர அடி (2,500 ச.மீ.) கட்டட பரப்பளவு வரை உள்ள தொழிற்சாலை கட்டடங்களுக்கு மூன்றாம் தரப்பினர் மூலம் கட்டட விதிமுறைகளை நிறைவு செய்வதினை உறுதி செய்து, ஒப்புதல் வழங்கப்படும். இதனால் தொழில் முனைவோர், மாவட்ட அலுவலகங்களுக்கு செல்லாமல், எளிதாக மற்றும் விரைவாக கட்டட அனுமதி பெறலாம். இந்த முன்முயற்சி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் திட்ட அனுமதியை எளிதாகப் பெற உதவுவதுடன் தொழில் வளர்ச்சியையும் பெருமளவில் உயர்த்தும்.


12. குடியிருப்பு கட்டட அனுமதிக்கான கூடுதல் அதிகாரப் உள்ளாட்சிகளுக்கு வழங்கப்படும். பகிர்வு

மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான அதிகாரம் தற்பொழுதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 16,140 சதுர அடியாக (1,500 சதுர மீட்டர்) உயர்த்தப்படும்.

பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான அதிகாரம் தற்பொழுதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாக (1,200 சதுர மீட்டர்) உயர்த்தப்படும்.

பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் குடியிருப்பு கட்டட அனுமதிக்கான அதிகாரம் தற்பொழுதுள்ள 10,000 சதுர அடியிலிருந்து 12,912 சதுர அடியாக (1,200 சதுர மீட்டர்) உயர்த்தப்படும்.

இதன் மூலம் சிறிய அளவிளான குடியிருப்பு விண்ணப்பங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலேயே ஒப்புதல் வழங்கப்படும். இதன் மூலம் சிறிய அளவிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு எளிமையாகவும் விரைவாகவும் அனுமதி வழங்கப்படும்.


13. உள்ளாட்சிகளுக்கு வணிக கட்டட அனுமதிக்கான கூடுதல் அதிகாரப் பகிர்வு.

cckkalviseithikal

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வணிக கட்டட அனுமதிக்கான அதிகாரம் தற்பொழுதுள்ள 2,000 சதுர அடியிலிருந்து 5,380 சதுர அடியாக (500 சதுர மீட்டர்) உயர்த்தப்படும். இதன் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பயன் பெறுவர்.


14. திட்டமில்லாப் பகுதிகளில் நன்செய் நிலங்களை வேளாண்மை அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவதற்கான நடைமுறை எளிமைப்படுத்தப்படும்.

திட்டமில்லாப் பகுதிகளில் குடியிருப்பு, வணிகம், தொழிற்சாலை போன்ற வேளாண்மை அல்லாத நோக்கங்களுக்காக நன்செய் நிலங்களை பயன்பாட்டிற்கு மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியரின் தடையின்மைச் சான்றிதழைப் பெற வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினை மாற்றி, நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிப்படையாமல், நகர் ஊரமைப்புத் துறையின் மாவட்ட அலுவலர், வேளாண்மைத் துறையின் இணை இயக்குநர், நீர்வளத் துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து தேவையான தடையின்மைச் சான்றிதழ்களை பெற்று, தொடர்புடைய துறைகளின் விதிகளைப் பின்பற்றி, விண்ணப்பங்களை விரைவாக, வேளாண்மையல்லாத பயன்பாட்டுற்கு நிலம் மாற்றம் செய்யப்படும்.


சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்


15. மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் (TDR) பரிவர்த்தனைக்கான மின்னணு இணையவழித் தளம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் (TDR) சான்றிதழ்கள் வழங்கல், பரிமாற்றம், பயன்பாடு மற்றும் கண்காணிப்பிற்காக ஒருங்கிணைந்த மின்னணு மாற்றத்தக்க வளர்ச்சி உரிமைகள் (TDR) இணையவழித் தளம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


16. சாத்தங்காடு இரும்பு மற்றும் எஃகு சந்தை வளாகம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள சாலைகளை மேம்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் பணிகள் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் சாத்தங்காடு இரும்பு மற்றும் எஃகு அங்காடி வளாகம் மற்றும் கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் உள்ள சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், உட்புறச்சாலை இணைப்புகளை வலுப்படுத்தவும் மற்றும் சரக்கு போக்குவரத்தை சீரமைக்கவும் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்படும். 


17. கோயம்பேடு அங்காடி மொத்த விற்பனை வளாகத்தில் கூடுதல் கடைகள் ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் அதிகரித்துள்ள நுகர்வோரின் வருகையை கருத்தில் கொண்டும், அங்காடியை விரிவாக்கம் செய்திட வேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கைகளை ஏற்றும், காய்கறி அங்காடியின் L M N (Block) தொகுதிகளுக்கு இடைப்பட்ட 22,000 சதுர அடி, பரப்பளவில், ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்படும்.


18. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி கடைகளுக்கு குடிநீர் இணைப்பு ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கோயம்போடு மொத்த விற்பனை அங்காடி வணிகர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, ஒவ்வொரு கடைக்கும் பிரத்யேக குடிநீர் இணைப்புகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.


தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்


19. தமிழ்நாட்டின் நகர்ப்புறங்களில் உள்ள 20 திட்டப்பகுதிகளில் சிதிலமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து புதிதாக 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு காரணங்களால் சிதிலமடைந்துள்ளன. இவற்றுள் தொழில்நுட்ப குழுவினால் சிதிலமடைந்ததாகக் கண்டறியப்பட்ட குடியிருப்புகளுள், முதற்கட்டமாக 20 திட்டப்பகுதிகளில் உள்ள 9,918 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் খ.2,882.62 கோடி திட்ட மதிப்பீட்டில் மறுகட்டுமானம் செய்யப்படும்.


20. சென்னை, பெரம்பூரில் சாலையோரங்கள், ஆட்சேபகரமான  இதர பகுதிகளில் வாழும் குடும்பங்கள் மற்றும் ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்காக 462 அடுக்குமாடி குடியிருப்புகள் খ.111.08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும். 


cckkalviseithikal

சென்னை பெரம்பூரில் சாலையோரங்கள், இதர ஆட்சேபகரமான பகுதிகளில் வசிக்கும் மற்றும் ஏழை எளிய வீடற்ற குடும்பங்களுக்காக 462 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.111.08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும்.


21. பயனாளிகள் தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின்கீழ் நில உரிமை கொண்ட, பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக 15,000 தனி வீடுகள் கட்டப்படும்.

சென்னை மற்றும் இதர மாநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூராட்சிகளில் கச்சா வீடுகளில் வாழ்ந்து வரும் நில உரிமை கொண்ட ஏழைக் குடும்பங்கள், கான்கிரீட் கூரையுடன் தனி வீடுகள் கட்டிக் கொள்வதை எளிதாக்க குடும்பம் ஒன்றிற்கு ரூ.2.50 இலட்சம் நிதி ஆதாரம் வழங்கப்பட்டு, 15,000 தனி வீடுகள் ரூ.987.42 கோடி திட்ட மதிப்பீட்டில் 2026-27 ஆம் ஆண்டில் கட்டப்படும்.


22. அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் 41,664 குடியிருப்புகளில் பழுது பார்த்தல், புனரமைத்தல் மற்றும் சமூக வசதிகள் ரூ.96.63 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் உள்ள 41,664 பழைய குடியிருப்புகளின் மேற்கூரை, படிக்கட்டுகள் மற்றும் தளத்தினை புனரமைத்தல், முகப்பினை புதுப்பித்தல், வெளிப்புற சுவர்களை பூசுதல், வர்ணம் பூசுதல், (Panel Board) பாதுகாப்பான முறையில் அமைத்தல், குடிநீர் வசதி அமைப்புகளின் திறன்கள் மற்றும் கழிவுநீரகற்று அமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் நியாய விலை கடைகள், சமுதாய நல கூடம், அங்கன்வாடி போன்ற சமூக வசதிகளை அமைத்தல் போன்ற பணிகள் ரூ.96.63 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


23. அடுக்குமாடி திட்டப்பகுதிகளில் குடியிருப்பு அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.355 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.


சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 208 அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதிகளில் கட்டப்பட்ட 1,39,710 அடுக்குமாடி குடியிருப்புகள் வாரியத்தின் பராமரிப்பில் உள்ளன. இத்திட்டப்பகுதிகளில் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலையினை உயர்த்த, சேவைத் துறைகளுக்கான கட்டணங்கள், சாலைகள், நடைபாதைகள், குடிநீர் கட்டமைப்புகள் மற்றும் விநியோக கழிவுநீரகற்று கட்டமைப்புகள், மின் விநியோக பாதுகாப்பு போன்ற முக்கிய நகர்ப்புற குடிமை உட்கட்டமைப்பு வசதிகள் புதிதாக அமைக்கவும், மேம்படுத்தவும் ரூ.355 கோடி திட்ட மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.


24. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வாழ்விட மின் மேலாண்மை தளம் (Tamil Nadu Integrated Smart Habitat Management Platform) ரூ. 75 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும். 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இணைய வழியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்தல், பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு (smart card) வழங்குதல், வாரியத்தின் அனைத்து அலுவல்களையும் இணைய வழியில் செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளுதல், காத்திருப்போர் பட்டியல் பராமரித்தல், குடியிருப்பு இருப்பு பற்றிய விவரம் வழங்குதல், பயனாளிகள் தரவுத்தளம் பராமரித்தல், குடியிருப்போர் குறைதீர்ப்பு செயலி மூலம் அவர்களின் குறைகளை களைதல் மற்றும் பராமரித்தல் கட்டணம் வசூலித்தல் ஆகியவற்றினை முழுமையாக இணைய வழியில் செயல்படுத்த தமிழ்நாடு ஒருங்கிணைந்த வாழ்விட மின் மேலாண்மை தளம் ரூ.75 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.



கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள்


25. ஒருமுறை கடன் தீர்வுத் திட்டம் மூலம் தவணைத் தொகை செலுத்த தவறிய முதன்மைச் சங்க உறுப்பினர்களின் வட்டித்தொகை தள்ளுபடி.

கடன்தாரர்களின் வட்டிச் சுமையை குறைக்கவும், முதன்மைச் சங்க அளவில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தவணை தவறிய கடன்களை வசூல் செய்வதற்கு வழிவகை செய்யவும், 31.03.2026 க்கு முன்னர் தவணை தொகையை செலுத்த தவறிய உறுப்பினர்களின் நிலுவையில் உள்ள அடமானக்கடன், கட்டுமானக்கடன் மற்றும் இதர கடன்களுக்கான அபராத வட்டி, டிகிரி வட்டி, தவணை தவறிய கடனுக்கான EMI வட்டி தள்ளுபடி வழங்கி மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் (LIG), நடுத்தர வருவாய் பிரிவினருக்கு (MIG) மேலும் 1 விழுக்காடு வட்டி தொகை தள்ளுபடி செய்யப்படும்.


26. இணையதளம் மற்றும் செயலி உருவாக்குதல்.

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களில் பொதுமக்களுக்கு விரைவாக சேவைகள் வழங்கவும்; நிர்வாகச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும்; வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யவும்; முறைகேடுகளைத் தடுக்கவும்; பொதுமக்களிடையே கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் மீதான நம்பகத் தன்மை அதிகரிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள 730 முதன்மைக் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் செயல்பாடுகளில் புகுத்தி தொழில்நுட்பங்களை இத்துறைக்கென பிரத்தியேக இணையதளம் மற்றும் செயலி உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.


cckkalviseithikal

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பு


27. சென்னைப் பெருநகரப் பகுதியில் டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய ஆட்டோ/டாக்ஸி செயலி அறிமுகப்படுத்தப்படும். 

ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், ஆட்டோ/டாக்ஸி பயணிகளுக்கு நியாயமான பயணத்தொகையை உறுதி செய்யவும், டிஜிட்டல் மீட்டர் உள்ளடக்கிய ஆட்டோ/டாக்ஸி செயலி, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பால் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.


28. விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகரப் பகுதியில் (5,904 sq.km) சாலை வலையமைப்பு திட்டம் (Grid of Roads) ரூ. 12 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.


விரிவாக்கப்பட்ட சென்னை பெருநகர பகுதியில் திட்டமிட்ட நகர வளர்ச்சியை உறுதி செய்யவும், எதிர்காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் மேலும் தடையற்ற போக்குவரத்து இயக்கத்தை உறுதி செய்யவும் சாலை வலையமைப்பு திட்டம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.


வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

மானியக் கோரிக்கை எண் -26

அறிவிப்புகள் 2026-2027

ப. ராஜ்குமார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்

Post a Comment

0 Comments