💫cckkalviseithikal💫 🏛️பள்ளிக்கல்வி இயக்குநராக திருமதி.லதா ‌நியமனம்.

💫cckkalviseithikal💫
🏛️பள்ளிக்கல்வி இயக்குநராக திருமதி.லதா ‌நியமனம்


CCK Director 

Click here

சுருக்கம்


cckkalviseithikal

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி திருமதி. ந.லதா, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் சென்னை 6 பள்ளிக்கல்வி இயக்குநராக முழு கூடுதல் பொறுப்பு வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.

பள்ளிக்கல்விய.த் துறை

அரசாணை (வாலாயம்) எண். 177

நாள்: 31.07.2026.

திருவள்ளுவராண்டு, 2057

பராபவ,ஆடி. 15

படிக்கப்பட்டது:-

அரசாணை (1டி)எண்.150, பள்ளிக்கல்வித் துறை, நாள் 31.07.2026

ஆணை:


பள்ளிக்கல்வி இயக்குநராகப் பணிபுரியும் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் 31072026 பிற்பகல் வயது முதிர்வு காரணமாக ஓய்வுபெறுவதால், பள்ளிக்கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிர்வாக நலன் கருதி, தற்போது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக பணிபுரியும் திருமதி. ந. லதாஅவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கி அரசு ஆணையிடுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

சந்தர மோகன். B

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்

பெறுநர்

திருமதிநலதா.

இயக்குநர்

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை 6.

பள்ளிக்கல்வி இயக்குநர் சென்னை 6.

Post a Comment

0 Comments