💫cckkalviseithikal💫 💢பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு.

💫cckkalviseithikal💫
💢பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் - பள்ளிக் கல்வித் துறையின் முக்கிய அறிவிப்பு. 

Click here

CCK Guideline Proceedings 


💢தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை-6.


5.5.1.5923/1/2026, न. 10.07.2026.

cckkalviseithikal

பொருள்:

💢பள்ளிக் கல்வி பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடைபெற வேண்டும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்குவது - தொடர்பாக.


பார்வை:

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் பத்திரிக்கை செய்தி நாள். 09.07.2026.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 57,671 பள்ளிகளில் 1,03,98,748 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவர்கள். பல்வேறு சமூக பொருளாதார நிலைகளில் இருந்து பள்ளிக்கு வருகின்றனர். மாணவர்களிடையே எவ்வித பாகுபாடு எண்ணங்களின்றி ஒற்றுமை உணர்வுடன் மன அழுத்தங்களைத் தவிர்த்து கல்வி கற்று வருகின்றனர். 

மாணவர்களிடையே பிளவையும், பாகுபாடான எண்ணங்களையும் ஏற்படுத்தாத வகையில் இளம் மனதில் சாதி, மத, அரசியல் சார்புகளின்றி முழுமையான கல்வியை அளிப்பதே கல்விக் கூடங்களின் முதன்மையான நோக்கம் ஆகும்.


 தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விதிகளின்படி அரசியல், வகுப்புவாத, பிரிவினைவாத மற்றும் கல்வி நோக்கமற்ற நிகழ்ச்சிகள், கூட்டங்கள், பிரச்சாரங்கள் ஆகியவற்றை நடத்த பள்ளி வளாகத்தைப் பயன்படுத்த கூடாது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் மட்டுமே நடத்துவதன் மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி வளர்ச்சியினை உறுதி செய்ய இயலும்.

ஆனால், பள்ளிக் கல்வியின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் சமீப காலங்களில் பள்ளி வளாகத்தை சாதி, மத, அரசியல் ரீதியான அடையாளங்களுடன் சிலர் பயன்படுத்தி வருவதாக தெரிய வருகிறது. 

இது மாணவர்களின் இளம் மனதில் அரசியல் சார்புகளை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டுவதாகவும். சில நேரங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், அதன் காரணமாக மாணவர்களை மன அழுத்தத்திற்கு உட்படுத்துவதாகவும் உள்ளது.

cckkalviseithikal

எனவே, பள்ளிகளில் சாதி, மத, அரசியல் சார்ந்த நிகழ்வுகளைத் தவிர்ப்பது மாணவர்களின் பாதுகாப்பையும்,ஒற்றுமையையும் வலுப்படுத்துவதாகவும் அமையும். எனவே, 


பின்வரும் செயல்பாடுகளை அனைத்துவகைப் பள்ளிகளிலும் தவறாமல் பின்பற்றுமாறு தெரிவிக்கப்படுகிறது.


💢1. பள்ளி வளாகங்கள் கல்வியின் முக்கியத்துவத்தை பேணிக்காக்கும் இடமாகவும், இனிமையான கற்றல் கற்பித்தல் சூழ்நிலை கொண்டதாகவும். மாணவர்களின் எதிர்கால இலட்சியங்களை நிறைவேற்றக் கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

💢2. பள்ளி வளாகங்களை கல்விசாராத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது.


💢3. வகுப்பறைகள். கலையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் அல்லது திறந்த வெளியில் மாணவர்களை ஒருங்கிணைத்தோ அல்லது வெளிநபர்களால் துறை சாராமல் நடத்தப்படும் ஒத்திகைகள், அணி வகுப்புகள் அல்லது வகுப்புவாதம் சார்ந்த செய்திகளைப் பரப்புதல் மற்றும் விழா நடத்துதல் போன்றவை பள்ளி வளாகங்களில் கட்டாயம் அனுமதிக்கக் கூடாது.

💢4. அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் அறிவிக்கப்படும் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களுக்கான நடைமுறைகளைத் தவிர பிற தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஏதும் பள்ளி வளாகத்தில் நடத்திடவோ அல்லது அவ்விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லவோ பங்குபெற அனுமதிக்கவோ கூடாது. மேலும், 


இது சார்ந்த கொண்டாட்டங்கள் தொடர்பாக விளையாட்டுப் போட்டிகள், மருத்துவ முகாம்கள். கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்தவிதமான நிகழ்ச்சிகளையும் எந்த வடிவத்திலும் பள்ளி வளாகத்தில் நடத்தக் கூடாது. மேலும், உணவுப் பொருட்கள், பரிசுப் பொருள்கள் வழங்குவதையும் முற்றிலும் தவிர்த்தல் வேண்டும்.

cckkalviseithikal

மேற்கண்ட அறிவுரைகளை எவ்வித சுணக்கமும் இன்றி பின்பற்றுமாறு சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குத் (இடைநிலை), (தொடக்கக் கல்வி), (தனியார் பள்ளிகள்) தெரிவிக்கப்படுகிறது.


தனியார் பள்ளி இயக்குநர்

தொடக்கக் கல்வி இயக்குநர்

பள்ளிக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments