✊வால்பாறை ஒன்றியத்தில் முறைகேடாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியதை கண்டித்து பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.
![]() |
| CCK News |
✊பொள்ளாச்சியில் உள்ள மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![]() |
| CCK News |
வால்பாறையில் கருமலை எஸ்டேட் பகுதியில் 5 துவக்கப்பள்ளியும், ஒரு நடுநிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகின்றன.
இதில், இடைநிலை ஆசிரியர்களாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி 2021ம் ஆண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதனைக் கண்டித்து 4 ஆண்டுகளாக பல்வேறு மனுக்களை கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் குற்றம் சாட்டினர்.
இதற்கு இடையே, தவறான பதவி உயர்வு வழங்கியது மட்டுமல்லாமல் முன் தேதியிட்டு அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டதற்கும், தங்களின் கண்டனத்தை தெரிவித்து, பொள்ளாச்சியில் உள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் நேற்று மாலையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்ட செயலாளர் வீராச்சாமி, மாநில துணை தலைவர் தங்கபாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக இரவு எட்டு மணி அளவில் காவல்துறை முன்னிலையில் மூன்று மாதங்களில் தீர்வு காணப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.


0 Comments