💫cckkalviseithikal💫 🌀பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தேர்வு 'TET தேர்வு இல்லை டெத் தேர்வு' ஆசிரியர்கள் அதிர்ச்சி

💫cckkalviseithikal💫
🌀பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தேர்வு 'TET தேர்வு இல்லை டெத் தேர்வு' ஆசிரியர்கள் அதிர்ச்சி

CCK TET News



அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009ல் நிறைவேற்றியது. 2010 ஏப்ரலில் அந்த 3 சட்டம் அமலுக்கு வந்தது.  அதன்படி, இடைநிலை,  பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) . கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து நாட்டில் 2011 முதல் டெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 2012 ஆண்டு முதல் டெட் நடை முறைக்கு வந்தது.

இந்நிலையில், ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், பணியில் உள்ள எல்லா ஆசிரியர்களும் அடுத்த 2 ஆண்டுகளில் டெட் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி - பெறாத அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணியில் தொடரமுடியாது. அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் ஓய்வு பெற்றவர்களாக கருதி, பென்ஷன் பலன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

 ஓய்வுக்கு 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதேநேரம் அவர்கள் பதவி உயர்வு பெற டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறியிருந்தது.

இதனால் 2012க்கு முன்பு பணியில் சேர்ந்த, எல்லா அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும் டெட் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு ஜூலை 4, 5 ஆம் தேதிகளில் சிறப்பு டெட் நடை பெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.

அதன்படி 1 -5 வகுப்பு பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு நேற்று நடந்தது. புதுச்சேரி கோரிக்கையை ஏற்று புதுச்சேரி ஆசிரியர்களுக்கும் சேர்ந்து இந்த தேர்வு நடத்தப்பட்டது. அதன்படி தமிழகம், புதுச்சேரியில் 222 மையங்களில் 61 ஆயிரத்து 386 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு ஆசிரியர்கள் கூறியது:


இந்த தேர்வில் எப்படி யும் பாஸ் ஆக வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாக கஷ்டப்பட்டு படித்த எங்க ளுக்கு தேர்வு ரொம்பவே கடினம்தான். குறிப்பாக உளவியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் ஒன்றும் புரிய வில்லை. 25 ஆண்டு களுக்கு முன்பு டிடிஎட் படித்த காலத்தில் உளவி யல் படித்தது. அதை இப் போது எப்படி நினைவில் வைத்திருக்க முடியும்? கணக்குப் பகுதி செய்து பார்க்க அதிக நேரம் தேவைப்பட்டது.

பொருத்துக இணை 2 இடங்களில் இடம் பெற்றது. இதற்கும் அதிக நேரம் தேவைப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பொதுவான டெட் தேர்வுடன் இந்த தேர்வை ஒப் பிட்டால், சிறப்பு டெட் தேர்வு 3 மடங்கு கடினம். 

இது டெட் தேர்வல்ல; டெத் தேர்வு-


அது தவிர, சிறப்பு டெட் ஆசிரியர்களுக்காக ஆன்லைன் வழியாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகளும் நடத்தப்பட்டன. அவர்கள் நடத்திய பகுதிகளில் இருந்து கேள்விகள் வரவில்லை. 

அந்த வகுப்பை நம்பி படித்தவர்களுக்கு இந்த தேர்வு ரெம்பவே கஷ்டம் தான். எனவே, எல்லா சமுதாய ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி விகிதத்தை 35 முதல் 40 சதவீதமாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

தமிழகத்தில் தேர்ச்சி சதவீதம், பிசி, எம்பிசி, சீர்மரபினருக்கு 55 சதவீ தத்தில் இருந்து 50 சதவீத மாகவும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 45 சதவீதத் தில் இருந்து 40 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தேர்ச்சி விகிதம் 35 சதவீதமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று 5.7 26 நடைபெற்ற இரண்டாம் தாளும் சற்று கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments