💫cckkalviseithikal💫 🎯தகவல் தெரிவிக்காமல் ஊதியப் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்து ஆகியோருக்கு விளக்கம் கேட்டு (Memo) இயக்குநர் உத்தரவு

💫cckkalviseithikal💫
🎯தகவல் தெரிவிக்காமல் ஊதியப் பிடித்தம் செய்த வட்டார கல்வி அலுவலர், கண்காணிப்பாளர், பிரிவு எழுத்து ஆகியோருக்கு விளக்கம் கேட்டு (Memo) இயக்குநர் உத்தரவு.

Click here

Elementary-Director-Proceedings
CCK Director Proceedings 




தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. 5.6.6. 014592/01/2026, . 24.07.2026

🎯பொருள்:

தொடக்கக் கல்வி வழக்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். திருமதி.C.ராஜேஸ்வரி என்பார் பி.லிட்., பி.எட், உயர்கல்வி தகுதிக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தொகையினை விளக்கக் கடிதம் அளிக்காமல் (Due Notice) திரும்ப செலுத்த ஆணை வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு W.P.No.25381 of 2021-ன் மீது 10.02.2026 அன்று தீர்ப்பாணை பெறப்பட்டது தீர்பாணையின்படி செயல்படாமைக்கு விளக்கம் கோருதல் சார்ந்து.


CCK Director Proceedings 


🎯பார்வை:

1. அரசாணை (நிலை) எண்.42. கல்வி நாள்.10.01.69.

2. அரசாணை στστ.107 . 20.01.1976. பள்ளிக் கல்வித் துறை.

3. தொடக்கக் கல்வி 1.5. στ.012605/31/2015, இயக்குநரின் கடித 11.08.2016.

4. சென்னை-9, தலைமைச் செயலகம், பள்ளிக் கல்வித் துறை, அரசுக் கடிதம் 6.3702/.5.1(2)/2017 .10.10.2017.

5. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு W.P.No.25381 of 2021 § 10.02.2026.

6. சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற

Contempt Petition No.2032 of 2026 in W.P.No.25381 of 2021.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர், திருமதி.C.ராஜேஸ்வரி என்பாருக்கு பி.லிட்., பி.எட்., உயர்கல்வி தகுதிக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு தொகையினை விளக்கக் கடிதம் அளிக்காமல் (Due Notice) திரும்ப செலுத்த ஆணை வழங்கியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு W.P.No.25381 of 2021-ன் மீது 10.02.2026 நாளன்று பெறப்பட்ட தீர்ப்பாணையில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

cckkalviseithikal

9. Accordingly, this Writ Petition is allowed and the impugned order to the extent indicated herein above is set aside. The matter is remitted back to the respondents authorities to issue notice to the petitioner for the aforesaid period and consider the explanation, if any, submitted by the petitioner by passing a speaking order and serving the same on the petitioner within a period of seven days from the date of passing of the order. Consequently, connected Miscellaneous Petitions are closed. No order as to costs.

Translation 👇


(9. அதன்படி, இந்த ரிட் மனு அனுமதிக்கப்படுகிறது மற்றும் மேலே சுட்டிக்காட்டப்பட்ட அளவிற்கு ஆட்சேபிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு மேற்கூறிய காலத்திற்கு அறிவிப்பு அனுப்புவதற்கும், மனுதாரர் சமர்ப்பித்த விளக்கம் ஏதேனும் இருப்பின், அதனைப் பரிசீலித்து ஒரு விளக்க உத்தரவைப் பிறப்பித்து, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் அதனை மனுதாரருக்கு வழங்குவதற்கும் இந்த விவகாரம் எதிர்மனுதாரர் அதிகாரிகளுக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. அதன் விளைவாக, தொடர்புடைய இதர மனுக்கள் முடித்து வைக்கப்படுகின்றன. செலவுகள் குறித்து எந்த உத்தரவும் இல்லை.)


அத்தீர்ப்பாணையினை செயல்படுத்தும் விதமாக சார்ந்த தலைமை ஆசிரியர் திருமதி.C.ராஜேஸ்வரிக்கு விளக்கக் கடிதம் (Due Notice) அளிக்கப்பட்டு, விரிவான ஆணை வழங்காமல், மீளவும் வட்டாரக் கல்வி அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டும், உயர் அலுவலர்களை கலந்தாலோசிக்காமலும், அன்னாருடைய ஊக்க ஊதியம் பிடித்தம் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஆதலால் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர காரணமாக இருந்துள்ள மதுராந்தகம் வட்டாரக் கல்வி அலுவலர். கண்காணிப்பாளர் மற்றும் இருக்கைப் பணியாளர் ஆகியோர் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(a)-ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது என்பதற்கான விளக்கத்தினை ஒரு வார காலத்திற்குள் பெற்று இவ்வியக்ககத்திற்கு அனுப்பிவைக்குமாறு செங்கல்பட்டு மாவட்டக் கல்வி அலுவலர்  (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.


தொடக்கக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments