🏛️நாளை (28.07.2026) சங்கப் பொறுப்பாளர்களுடன் கலந்த ஆலோசனைக் கூட்டம் - கல்வி அமைச்சர் அழைப்பு.
![]() |
| CCK Education Minister Meeting |
🏛️தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின்
செயல்முறைகள் சென்னை-6
5.5.6. 002 / 9 / 2026 நாள்: 27.07.2026
🏛️பொருள் :
பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அவர்கள் அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத சங்கங்களின் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் 28.07.2026 அன்று நடைபெறுதல் - கூட்டத்தில் கலந்து கொள்ள தெரிவித்தல் சார்பாக.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் ஆசிரியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியரல்லாத அமைச்சுப் பணியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தல் கூட்டம் ஒன்றை நடத்திட அமைச்சர் அவர்கள் விழைந்துள்ளார்.
இக்கூட்டம் பின்வரும் நிரல்படி நடைபெறும்.
cckkalviseithikal
🏛️நாள் : 28.07.2026 செவ்வாய் கிழமை
🏛️நேரம்: காலை 10.00 மணி முதல் 01.00 மணி வரை
🏛️கூட்டம் நடைபெறும் இடம்
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டட கூட்ட அரங்கம், கோட்டூர்புரம் சென்னை-600 025
🏛️கலந்து கொள்ள வேண்டிய சங்கங்களின் விவரம்
சங்க அமைப்பிற்கு இரு நபர்கள் மட்டுமே அனுமதி.
🏛️மேற்காண் இக்கூட்டத்தில் ஒரு சங்க அமைப்பிற்கு இரு நபர்கள் வீதம் கலந்து கொள்ளவும், தங்களது கோரிக்கைகளை அச்சுவடிவில் தயார் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒம்/-
தொடக்கக் கல்வி இயக்குநர்
ஒம்/-
பள்ளிக் கல்வி இயக்குநர்
நகல்: அரசு கூடுதல் முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9 பணிந்தனுப்பப்படுகிறது
நகல்: மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர் தகவலுக்காக
நகல்: இயக்குநர்கள், தொடக்கக் கல்வி / மெட்ரிக் பள்ளிகள் / அரசுத் தேர்வுத் துறை / மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் / ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை- 6/
குறிப்பு: (தொடர்புடைய இயக்குநர்கள் சார்ந்த அனைத்து சங்கங்களின் தகவலுக்குக் கொண்டுவர தெரிவிக்கலாகிறது)

0 Comments