⚡2026-2027ஆம் கல்வியாண்டிற்கான மன்றச் செயல்பாடுகளைத் துவக்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -06.
ந.க.எண்.031456/எம்1/இ1/மன்றச் செயல்பாடுகள்/2026, நாள்: .07.2026
⚡பொருள்:
பள்ளிக் கல்வி 2026-27 மன்றச் செயல்பாடுகள் மாணவர்களிடையே துவக்க நிகழ்ச்சி செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு சார்ந்து. மன்றச்
மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன் மேம்பாட்டில் மன்றச் செயல்பாடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரவும், அவர்களின் பன்முக வளர்ச்சியை உறுதி செய்யவும் இந்த மன்றச் செயல்பாடுகள் ஒரு அடிப்படை தளமாக விளங்குகின்றன.
அதன்படி, மன்றச் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை இதற்கென தனி பாடவேளை ஒதுக்கீடு செய்யப்பட்டு இச்செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இம்மன்றச் செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் வேறு எந்தவித செயல்பாடுகளுக்கும் இடமளிக்காமல், இச்செயல்பாடுகள் அனைத்தும் மகிழ்முற்றம் மாணவர் குழுக்கள் வாயிலாக நடைபெறுவதை உறுதி செய்தல் வேண்டும்.
மேலும், இந்த 2026-27 ஆம் கல்வியாண்டில், மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலை வணக்கக் கூட்டத்தின் போது நடத்திட தெரிவிக்கப்படுகிறது.
அதனடிப்படையில், இலக்கிய மன்றம், வினாடி-வினா மன்றம், சிறார் திரைப்பட மன்றம், கலை மற்றும் பண்பாட்டு மன்றம் (கலைத்திருவிழா) மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் போன்று பள்ளியளவில் செயல்படும் மன்றச் செயல்பாடுகளுக்கும் தனித்தனியாக ஒரு பொறுப்பாசிரியரையும், ஒவ்வொரு மன்றச் செயல்பாட்டிலும் சிறந்து விளங்கும் ஒரு மாணவரை அந்தந்த மன்றச் செயல்பாட்டிற்கான மாணவர் தூதுவராக (Student Ambassador) நியமித்தல் வேண்டும்.
மேலும், பின்வரும் நிகழிச்சி நிரலை பின்பற்றி ஆசிரியர்கள் மாணவர்களுடன் இணைந்து மன்றச் செயல்பாடுகளின் துவக்க நிகழ்ச்சியினை 28.07.2026 அன்று திட்டமிட்டு மே கொள்ளுதல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments