🎯+2 அசல் மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.
Click here
![]() |
| CCK+2 Original Mark sheet |
ஐயா/அம்மையீர்,
cckkalviseithikal
பொருள்:
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6, மார்ச் 2025-2026 மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வு பள்ளி மாணவர் மற்றும் தனித்தேர்வர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகித்தல் - தொடர்பாக.
1. சென்னை-6. அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் 6.6. 013695//2026. : 06.07.2026.
2. இதே எண்ணிட்ட இவ்வலுவலக கடிதம் நாள். 15.07.2026
பார்வை 1ல் காணும் கடிதத்தில் மார்ச் 2025-ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பள்ளிமாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல்கள் அனுப்பிவைக்கப்பட்டு, அட்டவணைப்பணி தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, 16.07.2026 அன்று, கீழ்க்காணும் ஆவணங்கள் பார்வை 2ல் காணும் கடிதம் வாயிலாக நான்கு வழித்தடங்களில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1. மார்ச் 2026-ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பள்ளி மாணவர்கள்/ தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள்
2. பழைய பாடத்திட்டத்தில் பயின்று மார்ச் 2026-ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள்
3. மார்ச் 2025-ல் மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள்
தேர்ச்சி 4. மார்ச் 2025-ல் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மார்ச் 2026-ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுதி பெறாத பள்ளி/தனித்தேர்வர்களுக்கான மதிப்பெண் பட்டியல்கள் (Statement of Mark Certificate)
பார்வை 1ல் காணும் இவ்வலுவலக கடிதத்தில், அட்டவணை பணி குறித்து வழங்கப்பட்ட அறிவுரைகளைப் பின்பற்றி மேற்காண் மதிப்பெண் சான்றிதழ்களுக்கான அட்டவணைப்பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
cckkalviseithikal
மேலும், பார்வை 1ல் காணும் கடிதத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடுகளை 250 பக்கங்களுக்கு மிகாமல் பைண்டிங் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடுகளை Scanning செய்யும் பொருட்டு, அவற்றை பைண்டிங் செய்யாமல் இடது பக்க மூலையில் மட்டும் நூல் கொண்டு தைத்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவற்றை தலைமையலுவலகத்தில் ஒப்படைக்கும் நாள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களின் அட்டவணைப்பணி முடித்தபின், மதிப்பெண் சான்றிதழ்களை மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டிய நாள். மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நாள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்க வேண்டிய நாள் குறித்த விவரம் பின்வருமாறு:
🎯உதவி இயக்குநர்கள் மதிப்பெண் சான்றிதழ்களின் அட்டவணைப்பணி முடித்து மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் | ஒப்படைக்கும் நாள். 29.07.2026
🎯மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும் நாள். 29.07.2026
🎯பள்ளித் தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கும் நாள்: 30.07.2026
மதிப்பெண் சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்கும்போது இத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதி மொழிப்படிவத்தினை தலைமையாசிரியர்கள், "தங்களது பள்ளியில் பொதுத்தேர்வெழுதிய (பள்ளி மாணவர்கள்/தனித்தேர்வர்கள்) அனைத்து தேர்வர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல்கள் பெறப்பட்டுள்ளது" என பூர்த்தி செய்து பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments