🛑மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
🛑மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் - 12.06.2026 அன்று சென்னையில் நடைபெற உள்ளது.
![]() |
| CCK CEOs Meeting |
🛑பொருள்:
பள்ளிக் கல்வித் துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 12.06.2026 அன்று நடைபெறுதல் - சார்ந்து.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அரசுக் கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான (இடைநிலைக் கல்வி/ தொடக்கக் கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் கீழ்க்கண்டவாறு நடைபெறும் என்ற விவரம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட கூட்டத்தில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்/அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் அந்த அந்த மாவட்டத்தற்குரிய கண்காணிப்பு அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
🛑ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடம்
அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கம், எட்டாவது தளம், கோட்டூர்புரம், சென்னை-85.
🛑நாள் மற்றும் நேரம்
12.06.2026 (வெள்ளிக் கிழமை), முற்பகல் 09.00 மணி.
மேற்கண்ட ஆய்வுக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கூட்டப் பொருள் சார்பான விவரங்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேற்கண்ட கூட்டப் பொருள் சார்ந்த விவரங்களை 10.06.2026 மாலை 4.00 மணிக்குள் இவ்வியக்கக பிடி-1 பிரிவு, மின்னஞ்சல் (pd1sec.dse@gmail.com) முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments