😈தெருநாய் அச்சுறுத்தலைத் தடுக்க பள்ளிகளில் பொறுப்பு ஆசிரியரை நியமனம் செய்ய தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு.
![]() |
| CCK Director Proceedings |
🧭தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6. ந.க.எண்.015042/ஜெ2/2025, நாள்: 11.06.2026
🧭பொருள்:
தொடக்கக் கல்வி தெருநாய் அச்சுறுத்தல் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குதல்-சார்ந்து,
🧭பார்வை:
1 மாண்பமை உச்சநீதிமன்ற Suo Moto Writ Petition (Civil) No.(s) 5 of 2025 ( 07.11.2025.
2 சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண். 016042/ஜெ2/2025, நாள் 10:122025
3. கால்நடை, பால்வளம், மீன்கள் மற்றும் மீனவர் நலத் துறையின் கடிதம் எண்.5143/AH3/2025-14, நாள் 27.05.2026.
4. . 9824/GL1(2)/2025-3, 04.05.2026
பார்வை 2-இல் காணும் செயல்முறைகளில், தெருநாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து, ஏற்கெனவே அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பார்வை 4.இல் காணும் அரசு கடிதத்தில், கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 விலங்குகளிடம் பாதுகாப்பாக நடந்து கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்சிகளைத் தொடங்குதல் மற்றும் நாய்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க பள்ளி வளாகங்களைப் பாதுகாப்பது.
2 மாநகராட்சி, விலங்கு நல அமைப்பு. சுகாதாரத் துறை ஆகியவற்றுடன் இணைந்து தெருநாய்களை நிர்வகிப்பதற்கான பொறுப்புள்ள நோடல் அதிகாரிகளை (Nodal Officers) நியமிப்பது.
பார்வை 1.இல் குறிப்பிட்ட மேற்காண் வழக்கில் தெரிவிக்கப்பட்ட அறிவுரையின்படி ஒவ்வொரு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளிலும் மற்றும் கல்வி / வருவாய் / மாவட்ட அளவில் ஓர் ஒருங்கிணைப்பு அதிகாரியை (Nodel Officer) நியமித்து,
வளாகத்தின் பராமரிப்பு, தூய்மை மற்றும் தெருநாய்கள் வளாகத்திற்குள் நுழையவோ அல்லது வசிக்கவோ இயலாதவாறு மேற்பார்வையிட வேண்டும். மேலும், சார்ந்த அலுவலர் குறித்த விவரங்கள் சார்ந்த உள்ளாட்சி அமைப்புக்கு தெரிவித்திடல் வேண்டும்.
எனவே, மேற்காண் பொருள் சார்ந்து அனைத்து பள்ளிகளிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அரசுக்கு அனுப்பும் பொருட்டு 22.06.2026-க்குள் இவ்வலுவலக மின்னஞ்சல் deejsections@gmial.com முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-தொடக்கக் கல்வி இயக்குநருக்காக
பெறுநர்
அனைத்துமாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)

0 Comments