✨அரசு கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்கள் / காப்பாளர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது.
அரசாணை விவரம் 👇
Click here
![]() |
| CCK Kallar School |
✨சுருக்கம்
கள்ளர் சீரமைப்பு மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன் பள்ளிகள் / விடுதிகள் - கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகள் ஆசிரியர்கள் / காப்பாளர்கள், காப்பாளினிகள் 2026-2027 ஆம் கல்வியாண்டு முதல் பொதுமாறுதல் கலந்தாய்வு கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் -ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நல(பிந3(1)த் துறை
அரசாணை (D) எண்.47
: 02.06.2026
பராபவ, வைகாசி-19
திருவள்ளுவர் ஆண்டு, 2057
படிக்கப்பட்டது:
1. அரசாணை (டி) 65, பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல
(3(1)) . : 19.08.2024.
2 மிகப்பிற்படுத்தப்பட்டோர் ஆணையரின் : 06.05.2026. கடித மற்றும் சீர்மரபினர் நல ந.க.எண்.பி2/2334496/2025
✨ஆணை:
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதலின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது.
2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்காக வெளிப்படையான, தெளிவான, ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கேற்ப கள்ளர்
cckkalviseithikal
சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கும் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகளை மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் அவர்கள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளார்.
3. மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து, கள்ளர் சீரமைப்பு தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள் / உயர்நிலைப் பள்ளிகள் /மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / காப்பாளர் / காப்பாளினிகளுக்கு 2026-2027-ஆம் கல்வியாண்டில் பொதுமாறுதல் வழங்குவதற்கு கீழ்க்காணும் நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென்று அரசு ஆணையிடுகிறது.

0 Comments