📢மாறுதல் கலந்தாய்வுக்கு (Transfer) விண்ணப்பிப்பது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் அறிவிப்பு.
Click here
![]() |
| CCK Transfer Proceedings |
பொருள்:
📢ஆதிதிராவிடர் நலம் ஆசிரியர் பணியமைப்பு - கல்வி - பள்ளிகள் -2026 2027 ஆம் கல்வி ஆண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுதல் விண்ணப்பங்கள் Online மூலம் 02.06.2026 முதல் 08.06.2026 வரை பதிவு செய்வது மற்றும் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக.
பார்வை:
📢அரசாணை (நிலை) எண்.31, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்(ஆதிந-7)துறை, நாள்.2208.2026
📌2. தொடர்புடைய ஆவணங்கள்.
2026-2027 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி / நடுநிலைப்பள்ளி / ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர். உடற்கல்வி ஆசிரியர் பட்டதாரி ஆசிரியர் / காப்பாளர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காப்பாளர் ஆகிய பதவிகளுக்கு இணையவழியில் பொதுமாறுதல் கலந்தாய்வு (General Transfer Counselling) நடைபெற உள்ளது. மேற்கண்ட பதவிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது விண்ணப்பங்களை கலந்தாய்வுக்கான இணையதளத்தில் (Counselling portal) பதிவு செய்ய வேண்டும்.
📌மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள், தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலை / உயர்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும்
📌தனி வட்டாட்சியர்களை (ஆதிதிராவிடர் நலம்) அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கான ஆசிரியர்களை 02.06.2026 முதல் 08.06.2026 பிற்பகல் 6 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு நேரில் வந்து கலந்தாய்வுக்கான இணையத்தில் (On-line portal) பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். மற்றும், முன்னுரிமை கோரும் இனங்களுக்கான விண்ணப்பங்களில் அதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திடவும். இயக்குநரகத்திலிருந்து கேட்கும்பொழுது சமர்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
📌மேற்படி On-line இல் பதிவு செய்யும் பணியினை மேற்கொள்ளும் பணியாளர்கள் தெளிவாகவும், எவ்வித தவறும் இன்றி பதிவு செய்திடல் வேண்டும். பதிவு செய்த விண்ணப்பத்தின் நகலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோலொப்பம் செய்து இயக்குநரகத்திற்கு அனுப்ப வேண்டும்.
📌On-line-இல் பொதுமாறுதல் கோரி பதிவு செய்யப்படும் விண்ணப்பங்களில் உள்ள பணி சார்ந்த விவரங்கள் (Service Data's) அனைத்தும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களால் சரிபார்க்கப்பட்ட பின்னரே பதிவு செய்யப்பட வேண்டும். பணிசார்ந்த விபரங்களில் (Data's) ஏதேனும் தவறுகள் ஏற்படும் பட்சத்தில், அதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர். கண்காணிப்பாளர் மற்றும் தொடர்புடைய அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
📌இணையதள (On-line) வழியில் பதிவு செய்வதற்கான பயனர் குறியீடு (User Name) மற்றும் கடவுச்சொல் (Password) அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு (E-Mail) அனுப்பப்படும். On-line-இல் பதிவு செய்தலில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் கீழ்க்கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருமதி.சி.லோகேஸ்வரி கண்காணிப்பாளர்-எ.பிரிவு-7338801290
திரு.பேச்சிநாதன் கண்காணிப்பாளர்-ஒ.பிரிவு-7338801292
திருமதி.உமாகல்யாணி-கண்காணிப்பாளர்-ஏ-பிரிவு-7338801298
திருமதியல்லவி-கண்காணிப்பாளர்-த-பிரிவு-7338801300
cckkalviseithikal
📌மேலே குறிப்பிட்ட காலகெடுவிற்குள் 02.06.2026 முதல் 08.06.2026 பிற்பகல் 6 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அதற்கு மேல் விண்ணப்பங்கள் On-line இல் பதிவு செய்ய இயலாது. எனவே, இதில் சுணக்கம் ஏதும் இன்றி சிறப்பு கவனம் செலுத்தி விரைந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் பதியப்பபடாமலோ, தவறுகளோ, குளறுபடிகளோ ஏற்பட்டால் அதற்கு அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
cckkalviseithikal
📌இணைய தளத்தில் பதிவு செய்வது தொடர்பான வழிமுறைகள்
http://onlinetn.com/counseling/login.aspx
🛑மேற்கண்ட இணையதள Address-ல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் குறியீடு ( User Name) மற்றும் கடவுச்சொல் (Password) கொண்டு Login செய்யவும்.
🛑Transfer Application "icon- click @.
() add click @ General Transfer Request Application addition" στ
🛑pop-up menu open
🛑முதலில் Applicant Name, Initial ஐ type செய்யவும். பிறகு Gender ஐ select செய்யவும்.
Select School / Hostel στο Menu Tab- Click @ w தோன்றும்.
pop-up menu
🛑Category, District, Place, School Name Hostel Name, Post o Subject select செய்தால் Present Post மற்றும் School Name தானாகவே தெரியும்.
🛑 Date of Birth முதல் Transfer request is for வரையுள்ள Field களில் Select செய்ய வேண்டியவைகளை Select செய்யவும்.மற்றவற்றை Type செய்யவும்.
🛑Save στο Button- Click @ General Application Details στο Pop-up Menu open ஆகும். அதில் தாங்கள் Select/type செய்த விவரங்களை சரிபார்க்கவும்.
🛑 Select / type செய்த விவரங்களை சரியாக இருப்பின் Confirm" என்ற Button ஐ click செய்யவும் அல்லது தவறாக இருந்தால் Cancel என்ற Button ஐ click செய்யவும்.
🛑Confirm செய்த பிறகு அடுத்த விண்ணப்பதாரர்களுக்கான விவரங்களை General Transfer Request Application of .
🛑 On-line-இல் விண்ணப்பதாரர்களின் விவரங்கள் தவறாக வழங்கப்பட்டால் அந்த விண்ணப்பங்கள் இயக்குநர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு நிராகரிக்கப்படும். அவர்கள் On-line கலந்தாய்வில் கலந்துக்கொள்ள இயலாது.
🛑விடுமுறை நாட்களிலும் இப்பணியினை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
cckkalviseithikal
ஒம்/கி.செந்தில் ராஜ்
ஆதிதிராவிடர் நல இயக்குநர்

0 Comments