📚சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (STET) Online மூலம் 08.06.26 முதல் 30.06.26 வரை பயிற்சி வழங்குதல் குறித்து இயக்குநர்களின் செயல்முறைகள்.
விவரம் 👇
Click here
📚பள்ளிக் கல்வி இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள், சென்னை 06.
5.5.5. 44750/4-3/2024 . 05.06.2026.
![]() |
| CCK TET Training class |
பொருள்
📚பயிற்சி. பள்ளிக்கல்வி - மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி வழக்கின் (SLP) தீர்ப்பாணையின் அடிப்படையில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை எதிர்கொள்ளுதல் குறித்து இணையதளம் வழியாக பயிற்சி வழங்குதல் 08.06.2026 30.06.2026 முடிய பயிற்சி வழங்குதல் - அறிவுரை வழங்குதல் தொடர்பாக
பார்வை
1 அரசாணை (நிலை) எண்.231. பள்ளிக்கல்வித் துறை.
நாள்.13.10.2025
2 சென்னை-09, தலைமைச் செயலகம், பள்ளிக்கல்வித் துறை.
அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம் எண்.449/ஆ.தே.வா/2025,
நாள்:13.10.2025
3 இத்நிறுவன இயக்குநரின் செயல்முறைக் கடிதம்
நக.எண்.44750/எஃப்-3/2024 நாள் 22.10.2025 மற்றும் 03.06.2026
பார்வை (1) இல் காணும் அரசாணையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள், அத்தேர்வினை 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
![]() |
| CCK STET GOOGLE SHEET |
பார்வை (3) இல் காணும் கடிதத்தின்படி, சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு 08.06.2026 முதல் 30.06.2026 முடிய பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சி மாலை 06.30 மணி முதல் 08.00 மணி முடிய நடைபெறவுள்ளது.
இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள Google படிவத்திற்கான Link-ஐ சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தெரியப்படுத்தி இணையப் பயிற்சியில்
cckkalviseithikal
கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இயக்குநர்
தொடக்கக் கல்வி
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்
இயக்குநர்
பள்ளிக் கல்வி
5/6/20
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) இணையவழியில்
வலுவூட்டுதல் பயிற்சிக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்
(SOP)
cckkalviseithikal
1. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயன்பெறும் வகையில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வலுவூட்டுதல் பயிற்சியினை மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT), சென்னை-6 ஏற்பாடு செய்துள்ளது.
2. இப்பயிற்சியானது இடைநிலை ஆசிரியர்கள் (SGT) தாள்-1 மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் (BT) தாள்-2 ஆகிய தேர்வினை எதிர்கொள்ளத் தயார்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ளும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறையினால் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியே இந்த வழிகாட்டுதல் திட்டமாகும்.
4. இப்பயிற்சித் திட்டம் வருகின்ற 08 ஜூன் 2026 முதல் 30 ஜூன் 2026 வரை நடைபெறும்.
5. இந்த வலுவூட்டுதல் பயிற்சித் திட்டம் முழுவதுமாக இயங்கலை (Online) முறையில் மட்டுமே நடத்தப்படும்.
6. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இப்பயிற்சியில் பங்கேற்க முடியும்.
7. ஆசிரியர்கள் தங்கள் பெயர், வயது, பணி அனுபவம், பதவி, EMIS எண், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, பள்ளி முகவரி கல்வி ஒன்றியம் மற்றும் மாவட்டம் போன்ற துல்லியமான விவரங்களப் பதிவு செய்தல் வேண்டும்.
8. வெற்றிகரமாக மின்னஞ்சலுடன் முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வகுப்பில் இணைவதற்கான இணைப்பு (Joining Link) மற்றும் கால அட்டவணை மின்னஞ்சல் மற்றும் டெலிகிராம் (இக்குழுவில் சேருவதற்கான இணைப்பு மற்றும் QR Code) வாயிலாக பகிரப்படும்.
9. SCERT, DIET மூலம் நடத்தப்படும் இந்த இயங்கலை வகுப்புகள் ஒரு வலுவூட்டுதல் மட்டுமே. இவை TET பாடத்திட்டத்தின் முக்கிய தலைப்புகள் குறித்த தெளிவான கருத்தியல் கண்ணோட்டத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன:
10. இந்த வலுவூட்டுதல் வகுப்புகள் SCERT, DIET ஆல் பரிந்துரைக்கப்பட்ட அந்தந்த பாட வல்லுநர்களால் கையாளப்படும்.
11 வழிகாட்டுதல் அமர்வுகளின்போது, பாட வல்லுநர்களால் எந்தவிதமான குறிப்புப் பொருட்களோ (Reference materials), குறிப்புகளோ கூடுதல் ஆதாரங்களோ பகிரப்பட மாட்டாது.
cckkalviseithikal
12. பங்கேற்பாளர்கள் நேரலை அமர்வுகளின்போது, தனிப்பட்ட குறிப்புகளை எடுத்துக் கொள்ளவும், அதன் மூலம் சுயப்பயிற்சியைத் தொடரவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
13. இப்பயிற்சியில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் தலைப்புகள் பங்கேற்கும் ஆசிரியர்களின் TET தயாரிப்பிற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
14. இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் இந்தப் பயிற்சியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து மட்டுமே வரும் என்று கருதக்கூடாது.
15. ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்துகொள்வது மட்டுமல்லாமல், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை கொண்டு தயாரிப்பை மேலும் தொடர அறிவுறுத்தப்படுகிறார்கள்.
16. பயிற்சிக்கான பதிவிற்குப் பிறகு. பகிரப்படும் தினசரி அட்டவணையின்படி பங்கேற்பாளர்கள் சரியான நேரத்திற்கு வகுப்பில் இணைய வேண்டும்.
17. ஆசிரியர்கள் தடையற்ற இணைய வசதி, செயல்பாட்டில் உள்ள ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் இடையூறு இல்லாத அமைதியான இடத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
18. தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒவ்வொரு ஆசிரியரின் தொடர்ச்சியான சுய தயாரிப்பு, பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பைப் பொறுத்தே அமையும்.
19. ஆசிரியர்கள் தங்களது வழக்கமான பள்ளிப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த வாய்ப்பைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு வலுவூட்டும் பயிற்சி -அணுகுவதற்கான வழிமுறைகள்
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (SCERT) வாயிலாக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான வலுவூட்டும் பயிற்சி வரும் 08-06-2026 முதல் 30-06-2026 வரை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனக் (DIET) கல்வியாளர்கள் மூலம் இணையவழியாக (ONLINE MODE ONLY) நடத்தப்பட உள்ளது. இப்பயிற்சியானது YouTube வாயிலாக வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை நேரலையாக நடைபெறும். ஒவ்வொரு நாளும் பாடவாரியாக வகுப்புகள் நடைபெறும்.
1. 5. ឈប់ ប (Google Form Registration)
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் இவ்வலுவூட்டும் பயிற்சியில் கலந்துகொள்ள, விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தில் (Google Form) தங்களது விவரங்களைப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
பெயர் (Name)
cckkalviseithikal
வயது (Age)
பணி அனுபவம் (Experience)
पी (Designation)
EMISID
கைபேசி எண் (Mobile Number)
மின்னஞ்சல் முகவரி (Email ID)
பள்ளி முகவரி (School Address)
கல்வி ஒன்றியம் (Educational Block)
மாவட்டம் (District)
KINDLY NOTE:
GOOGLE form link 👇
Click here
Telegram Link 👇
Click here
மேற்குறிப்பிட்டுள்ள google form QR code படிவத்தின் மூலம் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு மட்டுமே பயிற்சிக்கான YouTube லிங்க் (Link) அனுப்பி வைக்கப்படும். எனவே, பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்த ஆசிரியர்கள் தகவல்களைப் பதிவு செய்து இப்பயிற்சியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
2. பாடப்பிரிவுகள் மற்றும் கால அட்டவணை
தேர்வுப் பிரிவு
பாடங்கள்
நேரம் மற்றும் நாட்கள்
08/06/2026
30/06/2026
TET 1
குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (CDP) தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் சூழ்நிலையியல்.
திங்கள் முதல் வெள்ளி வரை
6:30 PM-8:00 PM
TET 2 (தாள் 2)
'குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (CDP),தமிழ்,ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல்
திங்கள் முதல் வெள்ளி வரை
6:30 PM-8:00 PM
குறிப்பு: சமூக அறிவியல் (Social Science) பாடத்திற்கான பயிற்சி வகுப்பு அதே நேரத்தில் மற்றொரு தனி You Tube லிங்க் வாயிலாக நடைபெறும்.


0 Comments