📌இன்று 13.05.2026 நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கின் விவரம்.
![]() |
| CCK TET Case |
📌ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கின் 01-09-2025 நாளிட்ட தீர்ப்பின் மீதான 68 மறு சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையில் இன்று 20 க்கும் மேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
📌இதில் மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, முகுல் ரோத்தகி போன்றோர் வாதிட்டனர்.
📌உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், மேகாலயா போன்ற பல்வேறு மாநிலங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் வாதாடினார்கள்.
📌வழக்கு விசாரணையை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் வழக்கின் ஆரம்பம் முதல் இறுதி வரை வழக்கில் மிகவும் கடுமை காட்டினார்கள்.
📌Parliment ன் RTE Act - Second Amendment பற்றி விவாதம் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டது.
📌மாணவர்களின் கல்வி தரத்தை மையமாகக் கொண்டு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்து இரண்டு நீதி அரசர்களும் விசாரணை மேற்கொண்டார்கள்.
📌தமிழ்நாடு அரசு சார்பில் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் குப்தா இரண்டு ஆண்டு கால அவகாசத்துடன் கூடுதலாக இரண்டு ஆண்டு காலம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார்.
📌பதவி உயர்வு சார்ந்து எந்த வழக்கறிஞர்களும் எந்தவிதமான வாதத்தையும் முன் வைக்கவில்லை.
📌அதாவது பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமா? அல்லது கட்டாயம் இல்லையா? என்பது பற்றி எந்த வழக்கறிஞர்களும் வாதிடவில்லை.
📌தேர்ச்சி பெறுவதற்கு கூடுதலாக காலம் வழங்குவது பற்றி பரிசீலிக்கிறோம் என்று 2 நீதி அரசர்கள் கூறியுள்ளார்கள்.
📌ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற கூடுதல் கால அவகாசத்தை கேட்டு வேறு சில மாநிலங்களும் வாதங்களை முன் வைத்தனர்.
📌31.08.2027 க்குள் 2 ஆண்டுகளுக்குள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற இரண்டு ஆண்டு காலம் கால அவகாசம் மேலும் இரண்டு ஆண்டுகள் நீடித்தது நீதி அரசார்களாலும் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
📌சீராய்வு மனுக்கள் தொடர்ந்து விசாரிக்கப்படுமா? என்பது
இணையதளத்தில் அப்டேட் செய்யப்படும் போது தான் தெரியும்.
📌NCTE notification ல்
Actக்கு முன்னால் நியமிக்கப்பட்டவர்களுக்கு தவிர்ப்பு உண்டு என்பதை ஏற்றுக் கொண்ட நீதிபதி Actல் தவிர்ப்பு உண்டா என்று கேள்வி எழுப்பினார்.
📌தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள்
மூத்த ஆசிரியர்களுக்கு தவிர்ப்பும் இல்லை எனில் 2 ஆண்டை 4 ஆண்டுகளாக நீடிக்க வாதம் செய்தனர்.

0 Comments