💫cckkalviseithikal💫 📚மூன்று நாள் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்

💫cckkalviseithikal💫
📚மூன்று நாள் பயிற்சி குறித்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்


📚மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள். 👇

CCK Training 


Click here


🌀பொருள்:

📚பள்ளிக்கல்வி பயிற்சி 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1,2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய பாடநூல்களுக்கான முதல் பருவத்திற்கு பயிற்சி வழங்குதல் திட்டமிடுதல் பணிமனை மற்றும் வட்டார அளவில் பயிற்சியினை வழங்குதல் நிதி ஒதுக்கீடு மற்றும் அறிவுரை வழங்குதல் தொடர்பாக.

🌀பார்வை

1. அரசாணை (நிலை) எண்.62 பள்ளிக்கல்வி (கஅப)த்துறை ब.06.03.2026

2 இந்நிறுவன இயக்குநரின் கடிதம் ந.க.எண் 2640773/

- 1/2025 09.04.2026, 18.05.2026 20.05.2026 


CCK Training 



📚பார்வையில் காண் அரசாணையில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை மாற்றியமைப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் கலைத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு உறுப்பினர்கள் மற்றும் பாட வல்லுநர்களைக் கொண்டு 2026 2027 ஆம் கல்வியாண்டில் 1 2 மற்றும் 3 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் புதிய பாடநூல்கள் நடைமுறைப்படுத்துவதற்கு எதுவாக மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் தொடர்ச்சியாக 01.06.2026 முதல் 03.06.2026 முடிய கீழ்க்கண்ட வகையில் 3 நாள்களுக்கு வட்டார அளவில் பயிற்சி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பாடங்களுக்கான தயாரிப்பு பணிமனை (RPs) : 30.05.2026

தமிழ்: 0106.2026

ஆங்கிலம் மற்றும் கணிதம்: 02.06.2026

அறிவியல், சூழ்நிலையியல் அறிவியல் மற்றும் சமூக அறிவியல்: 03.06.2026


📚எனவே, பயிற்சி நடைபெறும் மையங்கள் நல்ல காற்றோட்டம், குடிநீர், கழிப்பறை வசதிகளுடன் கூடிய இடத்தினை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலருடன் இணைந்து தெரிவு செய்து, உரிய நாளில் பயிற்சியினை வழங்கிடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இணைப்பில் உள்ளவாறு வட்டார அளவிலான பயிற்சிக்கு நிதி ஒதுக்கீடு தங்களது நிறுவன வங்கிக் கணக்கிற்கு அளிக்கப்படுகிறது. பயிற்சி முடிவுற்ற பின்னர் மீதத் தொகையினை உடனடியாக இந்நிறுவன IOB வங்கிக் கணக்கு எண்.142301000013540, IFS CODE:IOBA000123 செலுத்திடுமாறு தெரிவிப்பதுடன் பயனீட்டுச் சான்று. அசல் பற்றுச்சீட்டுகள், வருகைச் சான்று. பற்றொப்பச் சீட்டு, ஆசிரியர்களின் பின்னூட்ட விவரம், பயிற்சி சார்ந்த புகைப்பட நகல்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றினை தனிநபர் மூலம் இந்நிறுவனத்திற்கு அளித்தல் வேண்டும்.

Post a Comment

0 Comments