💫cckkalviseithikal💫
💥சிறப்பு நிலை (Special Grade) பெற உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி ஆணை வழங்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

📢உத்தரவு விவரம் 👇 

Click here

CCK Special Grade camp 



🛑பொருள்:


💥தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணிகள் - தொடக்கக் கல்வி இயக்கக்கத்தின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்க /நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் - இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிறப்பு நிலை அனுமதிக்க கோரும் - விண்ணப்பம் -தொடர்பாக

💥பார்வை : 

சங்கத்தினர்களிடமிருந்து .02.06.2026. வரப்பெற்ற கோரிக்கை மனு,

💥பள்ளிக் கல்வித் துறையில் 2004, 2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இளநிலை, இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்பட்டு பின்னர் அரசாணை நிலை எண்.99, பள்ளிக் கல்வி (வ.செ.) துறை, நாள்.27,06.2006-ன்படி 01.06.2006 முதல் காலமுறை ஊதியத்தில் பணிவரன்முறை செய்யப்பட்டனர்.

💥மேற்கண்டவாறு பணிவரன்முறை செய்யப்பெற்ற ஆசிரியர்களுக்கு முறையே 01.06.2016. ல் தேர்வுநிலை 01.06.2026-ல் சிறப்பு நிலை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய ஆணை பெற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பார்வையில் கண்டவாறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

💥மேற்காண் ஆசிரியர் சங்கத்தினரின் கோரிக்கையினை பரிசீலனை செய்யும் வகையில் 01.06.2026-ல் சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தி பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் ஆணை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக்கொள்ளப்படுகிறார்.

💥இச்சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வுகளிலிருந்து புகார்கள் ஏதும் பெறப்பட்டால் தொடர்புடைய அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சிறப்பு நிலை வழங்கும் நிகழ்வினை மாவட்டக் கல்வி அலுவலர் பார்வையிட்டு துரிதமாக வழங்குவதற்கான அறிவுளைகளை / வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வி இயக்குநருக்காக