⚓NHIS மருத்துவக் காப்பீட்டு திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு மற்றும் மருத்துவமனைகளின் பட்டியல். அரசாணை வெளியீடு.
Click here
![]() |
| CCK NHIS Hospitals |
⚓தமிழ்நாடு அரசு – புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (NHIS) 2026 –5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
⚓(முக்கிய அம்சங்கள்)
அரசாணை எண்: G.O.Ms.No.122
துறை: நிதித்துறை
⚓அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் – 2026 (NHIS 2026) செயல்படுத்தப்படுகிறது.
![]() |
| CCK NHIS 2026 Guidelines |
⚓புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026
1. மாத பிடித்தத் தொகை300 லிருந்து ₹390 ஆக உயர்வு.
2. 5-ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.
3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.
4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது.
முக்கிய அம்சங்கள்
⚓1. திட்ட காலம்
01.07.2026 முதல் 30.06.2031 வரை (5 ஆண்டுகள்).
2. காப்பீட்டு நிறுவனம்
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், சென்னை மூலம் திட்டம் செயல்படுத்தப்படும்.
3. மருத்துவ உதவித் தொகை
பொதுவான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சைகளுக்கு:
குடும்பம் ஒன்றுக்கு ரூ.7.50 லட்சம் வரை.
குறிப்பிட்ட சிறப்பு நோய்களுக்கு:
ரூ.12.00 லட்சம் வரை.
5 ஆண்டுகளுக்கான மொத்த குடும்ப உச்சவரம்பு:
ரூ.12.00 லட்சம்.
4. கார்பஸ் நிதி (Corpus Fund)
ஒவ்வொரு ஊழியரிடமிருந்தும் மாதம் ரூ.15 வசூலிக்கப்படும்.
அரிய நோய்கள், விசேஷ சூழ்நிலைகளுக்கு கூடுதலாக ரூ.15 லட்சம் வரை உதவி வழங்கப்படும்.


0 Comments