🚀அரசுப் பள்ளியில் தன் மகளைச் சேர்த்த தவெக MLA.
![]() |
| CCK News |
🚀திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மானாமதுரை த.வெ.க.,- எம்.எல்.ஏ., இளங்கோவன், தன் மகளை ஆறாம் வகுப்பில் நேற்று சேர்த்துள்ளார்.
🚀சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனி தொகுதியில், இம் முறை த.வெ.க.,வை சேர்ந்த தேவமித்ரா இளங்கோவன் வெற்றி பெற்றார்.
🚀திருப்புவனம் அருகே, அகரம் கிராமத்தை சேர்ந்த இவருக்கு, ஜெயலட்சுமி என்ற மனைவியும் தேவமித்ரா என்ற மகளும் உள்ளனர். தேவமித்ரா, அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பிற்கு செல்கிறார்.
🚀திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று எம்.எல்.ஏ., இளங்கோவன், மனைவியுடன் சென்று, மகளை ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டார். தலைமை ஆசிரியை இந்திராவிடம், பள்ளிக்கான தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

0 Comments