📚1,2,3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் - BEO, DEO, CEO & கல்வி அலுவலர்களுக்கு பள்ளிப்பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்.
Click here
![]() |
| CCK Logbook |
📚தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின்படி "வகுப்பறை உற்றுநோக்கல்" சார்ந்து கல்வி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்
📚1. தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (TNSEP-2025) தொடக்கக் கல்வியில் கீழ்க்காணும் சில முக்கியக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
![]() |
| CCK Visit Proceeding |
திறன் அடிப்படையிலான கற்றல்.
கதை/ பாடல்/ செயல்பாடு/ விளையாட்டுவழி குழந்தை மைய கல்வி கற்றல்.
மனப்பாட முறையை நீக்கிப் பொருள் உணர்ந்து கற்றல்.
இதன் அடிப்படையில் 1 - 3ஆம் வகுப்பிற்கான புதிய பாடநூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பாடத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்
அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன்களை (BLN) வலுப்படுத்துதல்.
கலை, விழுமியங்கள், வாழ்வியல் திறன்கள், சமூக மனவழுச்சிக் கற்றல் மற்றும் 21 ஆம் நூற்றாண்டுத் திறன்களை ஒருங்கிணைத்தல்.
குழந்தைகளைச் சிந்திக்க, வினா கேட்க, ஏற்ற சூழல்களில் கற்றவற்றைச் செயல்படுத்த ஊக்குவிக்கும் திறன்சார் கற்றலை மேம்படுத்துதல்.
மனப்பாட முறையில்லாமல் தாமாகக் கற்பதற்கும், சுயமாகச் சிந்திப்பதற்குமான வாய்ப்புகளை வழங்குதல்.
📚பாடத்திட்டக் கட்டமைப்பு
பாடநூலோடு ஒருங்கிணைக்கப்பட்ட பயிற்சித்தாள்கள்,
பாடத்தை நடத்துவதற்கு வழிகாட்டும் ஆசிரியர் கையேடுகள்.
விரைவுத் துலங்கல் குறியீட்டில் அசைவூட்டப்பட்ட காணொலிகள்.
(Animated Videos)
📚II- பள்ளிப் பார்வைக்குச் செல்லும் முன்
கல்வி அலுவலர்கள், வகுப்பறைப் பார்வைக்குச் செல்லும் முன் புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகளில் கூறப்பட்டுள்ள கற்பித்தல் அணுகுமுறையைப் புரிந்துக்கொண்டு செல்ல வேண்டும்.
வகுப்பறை உற்றுநோக்கலின் முக்கிய நோக்கம், ஆசிரியர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் ஏற்படும் இடர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டுவதே ஆகும்.
"பாடவாரியான வகுப்பறை உற்றுநோக்கல் படிவம்" இத்துடன் இணைப்பு (2) இல் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்திப் பள்ளிப் பார்வையை மேற்கொள்ள வேண்டும்.
📚III. வகுப்பறை உற்றுநோக்கலுக்கான பத்து முக்கிய வழிகாட்டுதல்கள்
1. கல்வி அலுவலர்கள் அனைவரும் 90 நிமிட வகுப்பறையை உற்றுநோக்க
வேண்டும்.
2. நாள்வாரியான பாடத்திட்டம், ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வகுப்பறைச் செயல்பாடுகள் நடக்கின்றனவா என்பதை உறுதி செய்யவும். ஒவ்வோர் ஆசிரியரும் ஆசிரியர் கையேட்டைப் படிப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
3. பாடப்புத்தகத்தில் உள்ள செயல்பாடு / பயிற்சி / விளையாட்டு /செயல்திட்டம் ஆகியனவற்றின் கற்றல் விளைவுகளை அறிந்து ஆசிரியர்கள் அவற்றை வகுப்பறையில் செயல்படுத்துகின்றனரா என்பதைப் பார்வையிட வேண்டும்.
4. விரைவுத் துலங்கல் குறியீட்டில் வழங்கப்பட்டுள்ள காணொலிகளை வகுப்பறையில் உள்ள திறன்பலகையில் (smartboard) பயன்படுத்தி, கற்பித்தல் நடைபெறுகின்றதா என்பதைப் பார்வையிட வேண்டும். ஆனால், இக்காணொலிகள் சில பாடப்பகுதிகளைக் கற்பிக்கும்போது தேவைக்கேற்ப மட்டுமே மேற்கொள்ளப்படும். இதனடிப்படையில், கல்வி அலுவலர்கள் பள்ளிப் பார்வையை மேற்கொள்ள வேண்டும்.
5. பேசுதல், கலந்துரையாடுதல் போன்ற வகுப்பறைச் செயல்பாடுகளில் மாணவர்களின் பங்கேற்பு 70% உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. பாடப்புத்தகத்தில் ள்ள பயிற்சிகள், மாணவர்களால் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் மாணவர்களின் படைப்புகள் வகுப்பறையில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றனவா என்பதையும் பார்வையிடவும்.
7. குழுச் செயல்பாட்டின்போது அனைத்து மாணவர்களும் சகமாணவர்களுடன் கலந்துரையாடி அச்செயல்பாட்டை செய்கின்றனரா என்பதைப் பார்வையிடவும்.
8. மாணவர்களின் செயல்பாடுகள் / செயல்திட்டம் / படித்தல் பலகை / Reading Stars / Popcorn Words / வகுப்பறைக் கலைக்கூடம் போன்றவை மாணவர்களிடம் சரியான நோக்கில் சென்றடைந்துள்ளதா என்பதைச் சரிபார்த்தல் வேண்டும்.
9. சமூக மனவெழுச்சிக் கற்றலுக்கான (SEL) மின்னுருப் பாடத்திட்டம் (Digital Lesson plan) விரைவுத்துவங்கல் குறியீட்டில் (QR Code) அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய பாடவேளையில் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். செயல்பாடுகள்,
10. மாணவர்களின் கற்றல் அடைவினைப் பதிவு செய்யும் "மதிப்பெண் பதிவேடு" ஆசிரியர் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது. பருவ இறுதியில் ஆசிரியர்கள் இப்படிவத்தை நிரப்பியுள்ளனரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.


0 Comments