📚11 ஆம் வகுப்பு மாணவர்கள், வித்யாதன் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கலாம்.
📚கூடுதல் விவரங்களுக்கு 👇
Click here
📚2026 - ல் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
![]() |
| CCK Vidyadhan Scholarship |
📚வித்யாதன் பற்றி:
வித்யாதன் கல்வி உதவித்தொகை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் மூலமாக கொடுக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற திறனாய்வு தேர்வுக்கு உட்படுத்தபடுவார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள்.
உதவித்தொகை பெறும் மாணவர்கள் வரும் கல்வியாண்டில் நல்ல மதிப்பெண் பெற்றால் அடுத்து அவர்கள் விரும்பும் மேற்படிப்புக்கும் உதவப்படும்.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், கோவா, ஒடிசா, புது டெல்லி, லடாக், பீகார், உத்தர பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும மேகாலயா ஆகிய மாநிலங்களில் தற்போது 15000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
📚விண்ணப்பிக்க 👇
Click here
தமிழ்நாடு வித்யாதன் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, தற்போது 5760 மாணவர்கள் தங்களுடைய படிப்பை மேற்கொண்டும் மற்றும் பல்வேறு நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த உதவித்தொகை அறக்கட்டளையின் மூலமாகவும் வெளிப்புற ஆதரவாளர்கள் மூலமாகவும் கொடுக்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை 10,000 முதல் 75,000 வரை மாநிலம், படிப்பு மற்றும் படிக்கும் காலத்திற்கு தகுந்தாற் போல் வேறுபடும். தேர்ந்தெடுக்கபட்ட மாணவர்கள் வித்யாதன் நடத்தும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு 11-ஆம் வகுப்பு கல்வி உதவித்தொகை 2026
📚கல்வி உதவித்தொகையின் அளவு:
11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ. 10,000/-வழங்கப்படும்.
📚விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்:
வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற, மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் (மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 70 சதவீத மதிப்பெண்கள் தேவை).
📚தேர்ந்தெடுக்கும் முறை:
மாணவர்களின் விண்ணப்பங்கள் மதிபெண்கள் மற்றும் கொடுக்கபட்ட விவரங்களின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திறனாய்வு தேர்வு குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு Online மூலம் அழைக்கப்படுவார்கள்.
மாணவர்களின் விவரம் மற்றும் நேர்முகத்தேர்வின் அறிவிப்புகள் தெர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தனித்தனியாக அனுப்பப்படும்.
வித்யாதன் கல்வி உதவித்தொகை. தற்பொழுது பதினோறாம் வகுப்பு படிக்கின்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்பில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கு கடைசி தேதி ஜூலை-12.

0 Comments