💫cckkalviseithikal💫 📚இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு

💫cckkalviseithikal💫
📚இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

விவரம் 👇 

CCK JD Order 



பொருள்:

💥பள்ளிக் கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 31.05.2026 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை/பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்களும்) காலிப்பணியிட விவரங்கள் கோருதல்- சார்பு.


💥பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு /நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள அனைத்துப்பாட பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் (31.05.2026 அன்றைய நிலவரப்படி) இடைநிலை ஆசிரியர்களின் நிரப்பத்தகுந்த காலிப்பணியிட விவரங்களை 

💥இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 20.05.2026க்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கு (c3supdtdse@gmail.com) அனுப்பி வைக்குமாறும் அதன் நகலினை முதன்மைக் அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பி வைத்திடவும் அனைத்து கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


CCK Vacancy 



💥மேலும் காலிப் பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2025 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி (Surplus Post Without Person) எனக் கண்டறிந்து (நாளது தேதியில்) இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்படும் பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப் பணியிடங்களாகக் கருதக்கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


💥மேலும், காலிப்பணியிட விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பும்போது தற்போதைய நிலவரப்படி நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் (Eligible vacancy) தானா என்பதையும், இப்பணியிடம் அப்பள்ளியில் IFHRMSல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


பள்ளிக்கல்வி இணை இயக்குநர் 
(பணியாளர் தொகுதி)

Post a Comment

0 Comments