🚀தேர்தல் நடத்தை விதிமுறை - வேட்பாளருக்கு சால்வை அணிவித்த அரசு பணியாளர் சஸ்பெண்ட்.
♀️தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழங்கப்பட்டுள்ள தற்காலிக பணியிடை நீக்க உத்தரவு விவரம்.
![]() |
| CCK Suspend Order |
❌தற்காலிக வேலை நீக்க உத்தரவு
நீங்கள் மேட்டுப்பாளையம் -1 கிளையில் ஒட்டுநர், நடத்துநர் மற்றும் தொழில் வினைஞர்களாகப் பணிபுரிந்து வருகிறீர்கள்.
- தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருப்பது தெரிந்திருந்தும்,
- நீங்கள் அதனை மீறி 02.04.2026 அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்த புகார் தொடர்பாக,
- உங்களை 05.04.2026 மற்றும் 06.04.2026 ஆகிய 2 நாட்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு,
- மேற்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு பாதகமில்லாமல் மீண்டும் உங்களை சேரவும் அனுமதிக்கப்படுகிறது. 07.04.2026 பணியில் சேரவும் அனுமதிக்கப்படுகிறது.
இது குறித்த விரிவான குற்றச்சாட்டு குறிப்பாணை உங்களுக்கு பின்னர் வழங்கப்படும்.
தகவலுக்காக
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் முடியும் வரை கட்சி சார்ந்த நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புகார்கள் ஏதேனும் தரப்பட்டால் புகாருக்குத் தக்கவாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

0 Comments