(THIRAN) திறன் செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க உத்தரவு.
இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்களின் உத்தரவு விவரம் 👇
Click here
![]() |
| CCK Thiran |
பார்வையில் கண்ட பொருள் சார்ந்த அச்சுப் பிரதியினை (Hard Copy) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்கள் (மேல்நிலை) 27.04.2026 மற்றும் 28.04.2026 ஆகிய நாள்களில் காலை 10.00 மணி அளவில் இணை இயக்குநர் (தொழிற்கல்வி) அவர்களின் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(THIRAN) திறன் செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கை
2025-2026 முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் (THIRAN) திறன் சார்ந்த அறிக்கையில் இடம் பெற வேண்டியவை.
மாவட்ட நிருவாகக்குழு விவரம் வட்டார அளவிலான நிருவாகக்குழு விவரம்-(THIRAN) திறன் மாணவர்களைப் பயிற்றுவிக்கும் விதமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் (THIRAN) திறன் மாணவர்களுக்குப் பயிற்சி நூல்கள் வழங்கப்பட்ட விவரம் முதன்மைக் கல்வி அலுவலரால், வட்டாரத் தலைமையாசிரியர்களால், வாரந்தோறும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட கூட்டம் மாதந்தோறும் திறன் சார்ந்து நடத்தப்பட்ட கூட்டம் நிருவாகக்குழு மற்றும் வட்டாரக்குழு உறுப்பினர்கள் (THIRAN) திறன் மாணவர்களைப் பார்வையிட்ட விவரங்கள்.
cckkalviseithikal
இணைக்கப்பட வேண்டியவை.
1. மாதாந்திர அறிக்கை வாயிலாக (THIRAN) திறன் மாணவர்களிடம் கண்டறியப்பட்ட குறைகள் மற்றும் அவற்றைச் சரிசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள்.
2. வருகைப்பதிவுக் குறைவு. கற்றல்குறைபாடு, பிற மாநில/தாய்மொழி தமிழ் அல்லாத மாணவர். குடும்பச்சூழல் போன்ற நிலைகளில் இருந்த (THIRAN) திறன் மாணவர்களில் சிறப்பான முன்னேற்றம் அடைந்த மாணவர்களின் விவரம்.
- 3. (THIRAN) திறன் மாணவர்களைச் சிறப்பான முறையில் முன்னேற்றம் அடையச்செய்த பள்ளிகள்
- ஆசிரியர்கள்
- பள்ளித் தலைமையாசிரியர்கள்
- மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும்
- அவர்கள் சிறப்பிக்கப்பட்ட விவரம்.
1. இறுதிநிலை மதிப்பீட்டுத் தேர்வில் (THIRAN) திறன் அடையாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் காரணங்கள் (பாடவாரியாக).
5. 2026-27 கல்வி ஆண்டில் (THIRAN) திறன் அடையாத மாணவர்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ள செயல்திட்டம்.
27.04.2026 அன்று வருகை புரிய வேண்டிய மாவட்டங்கள்:
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை. நாகப்பட்டினம், பெரம்பலூர், இராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருச்சி. திருப்பத்தூர். திருவள் ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம்.
28.04.2026 அன்று வருகை புரிய வேண்டிய மாவட்டங்கள்:
கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, நீலகிரி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவாரூர் மற்றும் விருதுநகர்.
ஒப்பம் /-
வெ.ஜெயக்குமார்
இணை இயக்குநர்(தொழிற்கல்வி)

0 Comments