💫cckkalviseithikal💫 🔥2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு மாணவர் மதிப்பெண் EMISல் பதிவேற்றம் செய்தல் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புகை பெறுதல், மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.

💫cckkalviseithikal💫
🔥2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு மாணவர் மதிப்பெண் EMISல் பதிவேற்றம் செய்தல் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புகை பெறுதல், மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல்  தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.


🌀தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் விவரம் 👇 


CCK Director Proceedings 



பொருள்:

🛑தொடக்கக் கல்வி 2025-26ஆம் கல்வியாண்டு மூன்றாம் பருவம் தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வு மாணவர் மதிப்பெண் EMISல் பதிவேற்றம் செய்தல் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புகை பெறுதல் மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக

பார்வை:

CCK Director Proceedings 



🛑1) தொடக்கக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்: 3675/ ஜெ2/2026, :04.03.2026

🛑2) சென்னை 6, தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல் முறைகள், ந.க.எண்: 3636/ ஜெ2/ 2025, நாள்: 25.03.2026

🛑3) தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் இணை செயல்முறைகள், ந.க.எண் : 48688/எம்1/இ1/2026, நாள்: 09.04.2026


🌴பார்வையில் காணும் செயல்முறைகளின்படி தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.


🌴அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகளை வழங்கிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.



🚀1) 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பீடு / ஆண்டு இறுதித் தேர்வில் 1 முதல் 8 வகுப்பில் பயின்ற மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை சார்ந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் 30.04.2026ஆம் தேதிக்குள் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும்.


cckkalviseithikal
🚀2) ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் / ஆசிரியர் தங்களது பள்ளி EMIS User Name -> Password -> Home Page -> Approvals -> SIDS -> DEE-School Infrastructure Details -> Assessment of infrastructure Needs-விவரங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப update செய்து Subrmit கொடுக்கும் பணியை 30.04 2026ஆம் தேதிக்குள் முடித்திட வேண்டும்.

 🌀மேற்படி DEE-School Infrastructure Details-ஐ பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / ஆசிரியர்கள் முழுமையாக update செய்து நிறைவு செய்தமையை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூர்ந்தாய்வு செய்திட வேண்டும்.


🚀3) மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கு 30.04.2026ம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர் / ஆசிரியர்கள் ஒப்புதல் பெற்றிட வேண்டும்.


🚀4) 2025-26ஆம் கல்வியாண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி மற்றும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி அளித்தலை 11.05.2026 முதல் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

Post a Comment

0 Comments