🔥பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அரசாணை வெளியீடு.
🟩பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை 15,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
📢ஆணை:
Click here
![]() |
| CCK GO |
படிக்கப்பட்ட அரசாணையில், மேலே முதலாவதாகப் அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் படி அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்
cckkalviseithikal
💢முறையே 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளில், மாணவர்களின் கூட்டுத் தொகையான 100 க்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு. கல்வி இணைப் பாடத் திட்ட செயல்பாடுகள் பயிற்றுவிக்க ஓவியம். உடற்கல்வி, மற்றும் தொழிற்கல்வி பிரிவுகளில் (தையல், இசை, கட்டிடக்கலை, தோட்டக்கலை, கணினி அறிவியல் மற்றும் வாழ்க்கை திறன் & தொடர்பு ஆகிய ஆறு பிரிவுகள் அடங்கும்) 16,549 பகுதிநேரப் பயிற்றுநர்கள் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ.5,000/ மாத ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
🚀2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2014-2015-ம் ஆண்டிற்கான திட்ட ஒப்புதல் குழுவின் ஒப்புதலின் அடிப்படையில் இவர்களது தொகுப்பூதியம் ரூ.5,000/- லிருந்து ரூ.7,000/-ஆக உயர்த்தப்பட்டது. இவர்களுக்கு மீளவும் 2017ஆம் ஆண்டு செயற்குழு கூட்டத்தில் (Executive Committee) நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி பகுதி நேரப்பயிற்றுநர்களின் ஊதியமானது ரூ.700/ உயர்த்தி ரூ.7,700/-ஆக மாதந்தோறும் ஊதியம் பெற்று வழங்கப்பட்டுள்ளது.
🔔3. மேலே மூன்றாவது மற்றும் நான்காவதாகப் படிக்கப்பட்ட அரசாணைகளின்படி பணியிலுள்ள 12,483 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாணவர்களின் கல்விசார் இணைச் செயல்பாடுகளை சிறக்கச் செய்து வருவதினால் அவர்களது பணித்திறனை மேலும் மேம்படுத்தும் பொருட்டு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி இவர்களது மாத ஊதியத்தினை (மே மாதம் நீங்கலாக 11 மாதங்களுக்கு) ரூ.7,700/- லிருந்து 10,000/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
⏩4. மேலே ஐந்தாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 12,105 பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு ஊதியமானது ரூ.10,000/-லிருந்து ரூ.12500/- என ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
✅5. மேலே ஆறாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பகுதிநேரப் பயிற்றுநர்கள் பணிநிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அளித்திட அரசிடம் கோரிக்கைகள் வைத்துள்ளனர் என்றும், இப்பொருள் சார்ந்து அரசினால் மேற்கொள்ளப்பட்ட தொடர் பரிசீலனைக்குப்பின் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பில் பகுதி நேரப் பயிற்றுநர்களுக்கு
cckkalviseithikal
📡தொகுப்பூதியம் மாதம் ரூ.12,500/-லிருந்து ரூ.15,000/- என 11 மாதத்திற்கு (மே மாதம் நீங்கலாக) ரூ.2,500/. உயர்த்தியும், மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000/- தொகுப்பூதியம் வழங்குவதாக அறிவித்ததையடுத்து, பகுதி நேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்கிடவும், ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 முடிய 11,773 பகுதி நேர பயிற்றுநர்களுக்கு ரூ.2,500/-உயர்த்தி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் தொடர் செலவின நிதியாக ரூ.8,82,97,500/-ஐ மட்டும் (117/3X2500X3 மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்து தருமாறும் மாநில திட்ட இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
🎤6. மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பினை தொடர்ந்து, மாநிலத் திட்ட இயக்குநரின் கருத்துருவினை ஏற்று, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் பணிபுரியும் 11773 பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 01.01.2026 முதல் தொகுப்பூதியத்தினை செலவினமாக ரூ.12,500/-லிருந்து ரூ.15,000/-ஆக உயர்த்தியும், மே மாதத்திற்கு மட்டும் ரூ.10,000/-ஐ சிறப்பு உதவித்தொகையாக வழங்கலாம் எனவும், அவ்வாறு உயர்த்துவதால் ஆண்டொன்றிற்கு தொடர் ரூ.44,14,87,500/-ஐ (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே பதினான்கு இலட்சத்து எண்பத்தேழாயிரத்து ஐந்நூறு மட்டும்) (11773x2500x11 மாதம் = 32,37,57,500/-11,77,30,000/- (11773x10000x1 மாதம்) ஒப்பளிப்பு செய்தும்
⬆️நடப்பாண்டிற்கு ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 முடிய மூன்று மாதங்களுக்கு ரூ.8,82,97,500/- (ரூபாய் எட்டு கோடியே எண்பத்தி இரண்டு ஐந்நூறு மட்டும்) இலட்சத்து தொண்ணூத்தேழாயிரத்து (11773x2500x3மாதம்) ஒப்பளிப்பு செய்தும் அரசு ஆணையிடுகிறது.
💢7. மேலே பத்தி 6-ல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்கப்பட வேண்டும்
📢-2202 பொதுக் கல்வி -01 தொடக்கக் கல்வி 101 அரசு தொடக்கப் பள்ளிகள்-மாநிலச் செலவினங்கள் AP ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கான தொகுப்பூதியம் -309 உதவித் தொகை 03 குறிப்பிட்ட திட்டங்களுக்கான உதவித் தொகை (IFHRMS DPC: 2202 01101 AP 309 03)
cckkalviseithikal
💢8. நடப்பாண்டிற்கான (ஜனவரி 2026 முதல் மார்ச் 2026 முடிய) செலவினத்தை 2025-2026-ஆம் ஆண்டின் நிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்தும் இறுதி திருத்த மற்றும் 2026-2027-ஆம் ஆண்டின் முதல் தொடர் செலவினமான ரூ.44,14,87,500/ஐ (ரூபாய் நாற்பத்து நான்கு கோடியே பதினான்கு இலட்சத்து எண்பத்தேழாயிரத்து ஐந்நூறு மட்டும்) 2026-2027-ஆம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகையிலிருந்தும் மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்.
✅9 இவ்வரசாணை, நிதித்துறையின் அசா.கு. எண்.296/நிதி-11/2026, நாள் 02.03.2026-ல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது.

0 Comments