💐திமுகவின் தேர்தல் அறிக்கை - அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு எட்டாவது ஊதியக்குழு அமைக்கப்படும். விவரம் 👇
Click here
![]() |
| CCK DMK Manifesto |
21
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன்
அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஒரு மாநில நிர்வாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள். இந்த இரு தரப்பினர் நலனையும் காத்து வருகிறது
- கழக அரசு. அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.
- அரசுப் பணியாளர்கள், விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால், 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 இலட்சம் ரூபாயும், ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
- பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் ஐந்து இலட்சம் முதல் ரூபாய் 10 இலட்சம் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும்
- உயர்கல்வி பயில ரூபாய் 10 இலட்சம் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
![]() |
| CCK DMK Manifesto |
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- வீடு கட்டுவதற்கான முன்பணம் 40 இலட்சம் ரூபாயிலிருந்து 50 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியப் பணிக்கொடை ரூபாய் 20 இலட்சத்திலிருந்து 25 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
- ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாவது குழந்தை பிறப்புக்கும் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்களின் சிறப்பு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்காகப் பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டுவது போல், தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் இருபதாண்டு காலக் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்...
🔥1. திராவிட மாடல் அரசால், கடந்த 3.1.2026 அன்று அறிவிக்கப்பட்ட “தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, ஓய்வுபெறும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும், 50 விழுக்காடு ஊதியம் ஓய்வூதியமாகவும், அத்துடன் இதர ஓய்வூதியப் பலன்களும் வழங்கப்படுவது உறுதி செய்யப்படும்.
🔥2. ஒன்றிய அரசு எட்டாவது ஊதியக் குழுவை மாண்புமிகு நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் அவர்களின் தலைமையில் அமைத்துள்ளது. இதன் பரிந்துரைகளை ஒன்றிய செயல்படுத்தியவுடன், அவற்றை மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் செயல்படுத்துவதற்கான உரிய குழு அமைக்கப்படும். இந்த ஊதிய விகிதங்கள் மாநில அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும். அரசு
🔥3. மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், தற்போது வழங்கப்படும் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
🔥4. அரசுத் துறைகள், வாரியங்கள், நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளில் ஏற்படும் 1.5 இலட்சம் காலிப் பணியிடங்கள் காலதாமதமின்றி நிரப்பப்படும். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள், உரிய நேரத்தில் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
🔥5. "ஓய்வூதியதாரர்கள் காப்பீட்டுத் திட்டத்தின்"கீழ் அனைத்து அரசு வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் ஓய்வூதியதாரர்களுக்கும், காப்பீட்டுத் திட்டத்தின் பலன்கள் முழுமையாகக் கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்.
🔥6. அரசு ஊழியர்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களது ஐம்பதாவது வயதில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் இலவச முழு உடற்பரிசோதனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
🔥தி.மு.க. தேர்தல் அறிக்கை 2026
⏩உள்ளடக்கம் - பக்கம்
1 மாநில உரிமைகள் .16
2 சமூகநீதி..17
3 கலை மற்றும் பண்பாடு.. .19
4 தமிழ் வளர்ச்சி 20
5 தொல்லியல். .21
6 இலங்கைத்தமிழர் நலன். 22
7 அயலகத் தமிழர்கள் நலன். 23
8 வேளாண்மை மற்றும் உழவர் நலன். 24
9 நீர் மேலாண்மை 28
10 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு 30
11 மகளிர் மேம்பாடு 33
12 குழந்தைகள் பாதுகாப்பு 36
13 இளைஞர் நலன் 37
14 முதியோர் நலன் 38
15 மாற்றுத்திறனாளிகள் நலன். 39
16 திருநர். திருநங்கையர் நலன்.. 40
17 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...... 40
18 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்......41
19 சிறுபான்மையினர்... 42
20 தொழிலாளர் பாதுகாப்பு 44
21 அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நலன். 46
22 வணிகர் நலன் 47
23 காவல்துறை. 48
24 பத்திரிக்கையாளர் நலன். 49
25 நெசவாளர் நலன்.. 50
26 பள்ளிக்கல்வி 52
27 உயர்கல்வி. .54
28 திறன் மேம்பாடு 58
29 செயற்கை நுண்ணறிவு. 60
30 தகவல் தொழில்நுட்பம். 61
31 சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம். 62
32 தொழில் வளர்ச்சி.....64
33 சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள். 68
34 புத்தொழில் (Startup) 71
35 திருக்கோவில் திருப்பணிகள் 72
36 சுற்றுலா வளர்ச்சித் திட்டங்கள். 74
37 விளையாட்டு மேம்பாடு 75
38 கால்நடை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு.. 77
39 பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடு 78
40 மீன்வளம் மற்றும் மீனவர் நலன் 79
41 ஊரக வளர்ச்சி மற்றும் தீவிர வறுமையை ஒழித்தல் 81
42 நகர்ப்புற முன்னேற்றம். 83
43 நெடுஞ்சாலைகள் 85
44 போக்குவரத்து.. 86
45 வீட்டுவசதி 88
46 நிருவாகத்தில் எளிமை. 89
47 பொது விநியோகம் 90
48 நிதி மேலாண்மை.
49 சிறப்புக் கவனப் பகுதிகள் வளர்ச்சித் திட்டம் 92
50 சிறப்புத் தொழில் வளர்ச்சித் திட்டம் 94


0 Comments