💫cckkalviseithikal💫 📚பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

💫cckkalviseithikal💫
📚பொதுத் தேர்வு விடைத்தாள் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு.

Click here


CCK RTI 



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நடைபெற்ற நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு விவரம். 👇


🛑நன்னடத்தை விதிகளை மீறி, மேல்முறையீட்டு அலுவலர் தகவல்களை வழங்காமல் செயல்பட்டுள்ளதால், அன்னார்மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு இவ்வாணையம் பரிந்துரை செய்கிறது.

🛑தகவல் பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், அரசுத் தேர்வுகள் துறை இயக்கக. பொதுத் தகவல் அலுவலர்/மேல்முறையீட்டு அலுவலர்கள் இத்தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்தினை கையாண்டுள்ள விதத்தினைக் கொண்டே அவர்களுக்கு இச்சட்டம் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லை என்பதையே காட்டுகிறது. எனவே, தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 19(8)(a(v)ன்படிஅரசுத் தேர்வுகள் துறை இயக்கக அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த பயிற்சிகள் அளிக்க பொது அதிகார அமைப்பிற்கு இவ்வாணையம் பரிந்துரை செய்கிறது.

🛑மேலும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும், தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும். சட்டமே மேலானது என்ற கோட்பாட்டின் அடிப்படையில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005-ன் மாண்பை நிலைநிறுத்தும் வகையில் இனி வருங்காலங்களில் மாணவர்கள் தாங்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் நகலினை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், எவ்வளவு மாதங்கள் திருத்தப்பட்ட விடைத்தாளை பராமரிக்கிறார்களோ அந்த குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பக்கத்திற்கு ரூ.2/- வீதம் செலுத்தி நகல்களை பெற்றுக்கொள்ளலாம் என்ற விவரத்தினை அரசுத் தேர்வுகள் இயக்கக அனைவரும் அறிந்துகொள்ளும்வண்ணம் வெளியிட தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 25(5) ன்படி இவ்வாணையம், அரசுத் தேர்வுகள் இயக்ககம் என்ற பொது அதிகார அமைப்பிற்கு உத்தரவிடுகிறது. இணையதளத்தில் மாணவர்கள்

🛑மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு. மாணவர்களின் விடைத்தாள்களை மின்னணு வடிவத்தில் (Digitalised Answer Sheets) மாற்றம் செய்து பாதுகாத்திடவும், அரசாணை (நிலை) எண் 6. பள்ளிக் கல்வி(அதே)த் துறை. நாள் 10.01.2019ன்படி பாதுகாக்கப்பட வேண்டிய திருத்தப்பட்ட விடைத்தாள்களின் காலக்கெடுவினை மூன்று மாத காலமாக குறைக்கப்பட்டைதை மீண்டும் ஆறு மாத காலமாக மாற்றியமைத்திட இவ்வாணையம் தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 25(5) ன்படி அரசுத் தேர்வுகள் இயக்ககம் என்ற பொது அதிகார அமைப்பிற்கு பரிந்துரை செய்து உத்தரவிடுகிறது.

🛑மேலும், மாணவர்களுக்கு தாங்கள் பெற்ற மதிப்பெண் குறித்த சந்தேகங்களை தீர்க்கவும். உரிய தீர்வை பெறவும். மாணவர்களின் ஐயப்பாட்டை நீக்கி உரிய கால அவகாசத்திற்குள் மதிப்பெண் பட்டியலைப் பெற்று, உயர் கல்வி பயில எதுவாக மாணவர்கள் கோரும் தகவல்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டவுடன், மாநிலம் முழுவதும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விடைத்தாள்களை வழங்கக் கோரி விண்ணப்பிக்கும்போது 30 நாட்களில் தகவல் தர வேண்டும் என்ற பொதுவான கால அவகாசத்தை மட்டும் கருத்தில் கொண்டு இயந்திரத்தனமாக செயல்படாமல், எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்தில் கொண்டு தகவல் பெறும் உரிமைச் சட்டப் பிரிவு 7(1)ல் குறிப்பிட்டுள்ளவாறு எவ்வளவு விரைவாக தகவல்களை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக (as expeditiously as possible) தகவல்களை வழங்க அரசுத் தேர்வுகள் இயக்கக பொது அதிகார அமைப்பிற்கு ஆணையம் உத்தரவிடுகிறது.

இவ்வழக்கு 24.03.2026 தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

ஓம்/-(வி.பி.ஆர். இளம்பரிதி) மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி?

உதவிப் பதிவாளர்

Post a Comment

0 Comments